இவர்களுக்காகத்தான் குல்தீப் யாதவை பதுக்கி வைத்திருந்தோம்.. அதற்கு கை மேல் பலனும் கிடைத்தது.. வெற்றிக்கு பின்னர் பேசிய ரிஷப் பண்ட்

ஐபிஎல் தொடரின் 56வது லீக் போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தோற்கடித்தது. டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் வெற்றிக்கான சில முக்கிய காரணங்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

டெல்லி அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங் தொடங்கிய டெல்லி அணிக்கு ஜாக் மெக்கர்க் 20 பந்துகளில் 50 ரன்கள், போரேல் 36 பந்துகளில் 65 ரன்கள் குவித்தனர். இறுதியாக ஸ்டெப்ஸ் 20 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மூன்று சிக்சர்கள் என 41 ரன்கள் குவிக்க 20 ஓவர்களில் டெல்லி அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவாகவே ஆட்டம் இழந்து வெளியேறினாலும் கேப்டன் சஞ்சு சாம்சன் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடினார். மற்ற ஆட்டக்காரர்கள் அனைவரும் விரைவாக ஆட்டமிழந்து வெளியேற சஞ்சு சாம்சன் மட்டும் 46 பந்துகளில் எட்டு பௌண்டரிகள், ஆறு சிக்ஸர்கள் என குறித்து 86 ரன்கள் விளாசினார்.

- Advertisement -

இறுதிக்கட்டத்தில் அவரும் ஆட்டமிழந்து வெளியேற, ராஜஸ்தான் அணியால் 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இறுதிக்கட்டத்தில் டெல்லி அணியின் சிறப்பான பந்துவீச்சால் 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் டெல்லி அணி தற்போது ஆறாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

இந்த வெற்றிக்கு பின்னர் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறும்பொழுது
“ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் எங்கள் பந்துவீச்சாளர்கள் யார்க்கர் பந்துகளை மிகவும் அற்புதமாக வீசினார்கள். ஒரு போட்டியில் வெற்றி, தோல்வி என்பதை தாண்டி ஆட்டத்தின் முடிவில் நேர்மறையான விஷயங்களை எடுத்துச் செல்ல வேண்டியது மிகவும் அவசியம். இறுதிக்கட்டத்தில் வரக்கூடிய ரோமன் பவல் மற்றும் பெரீரா ஆகியோருக்கு பேட்டிங்கில சில பிரச்சினைகள் இருப்பது தெரியும்.

- Advertisement -

இதனால் ஆட்டத்தின் 18வது ஓவரை குல்தீப் யாதவை வீசவைத்தோம். அதற்கு எங்களுக்கு நல்ல பலனும் கிடைத்தது. இந்தப் போட்டியில் நாங்கள் குவித்த ரன்கள் சரியாக இருக்கும் என்று நினைத்தோம். மேலும் இம்பாக்ட் பிளேயரை இந்த ஆட்டத்தில் முதலிலேயே எடுக்காமல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு எடுக்க முடிவு செய்தோம்.

இதையும் படிங்க:மெக்கர்க் சிறப்பாக விளையாடினார்.. ஆனா எங்க முக்கிய பௌலர்ஸ்க்கு எதிரா போட்டியை மாத்துனது இவர்தான்.. தோல்விக்கு பின்னர் சஞ்சு சாம்சன் பேட்டி

அது எங்களுக்கு இன்று நல்ல பலன் அளித்திருக்கிறது. வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சி இருக்கிறது. எனவே இரண்டு போட்டியிலும் வெற்றி பெற கடமையாக உழைப்போம்” என்று கூறியிருக்கிறார். இந்த போட்டியின் வெற்றி பெற்றதன் மூலம் டெல்லி அணியின் ப்ளே ஆப் சுற்று வாய்ப்பு இன்னும் பிரகாசமாக இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles