இந்த பையன் பிரமாதமா பவுலிங் போடுறார்.. நாங்க மேட்ச் தோத்ததே இவராலதான்.. தோல்வி குறித்து தவான் பேச்சு

ஐபிஎல் தொடரின் 11வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இரு அணிகளுமே தோல்வியில் இருந்து வந்ததால் வெற்றிக்காக போராடின.

- Advertisement -

முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதிரடியாக தொடங்கிய கே எல் ராகுல் மற்றும் டி காக் ஜோடி எதிர்பாராத நேரத்தில் விக்கெட்டை பறி கொடுத்தது. 15 ரன்களில் கே எல் ராகுல் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த படிக்கல் 9 ரன்களில் வெளியேறினாலும், ஆல் ரவுண்டர் ஸ்டானிஷ் ரன் வேகத்தை அதிகரித்து விட்டுச் சென்றார்.

- Advertisement -

அதற்கு அடுத்து வந்த கேப்டன் பூரன் விக்கெட் சரிவினைத் தடுத்து நிறுத்தி வேகமாக ரன்களைக் குவிக்க ஆரம்பித்தார். 21 பந்துகளை எதிர்கொண்டு மூன்று பவுண்டரிகள் மூன்று சிக்சர்கள் என 42 ரன்கள் விளாசி ஆட்டத்தின் சூழ்நிலையை மாற்றி விட்டு சென்றார். ஒரு முனையில் நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த டி காக் 38 பந்துகளில் 54 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, இதனை கடைசி கட்டத்தில் களமிறங்கிய ஆல்ரவுண்டர் குரனால் பாண்டியா நன்கு பயன்படுத்திக் கொண்டார்.

- Advertisement -

18 வது ஓவரை ஹர்சல் பட்டேல் வீச அந்த ஓவரில் க்ருனால் பாண்டியா இரண்டு பவுண்டரிகள் ஒரு சிக்சர் என 20 ரன்கள் விளாசி ஆட்டத்தின் போக்கை முற்றிலுமாக மாற்றினார். இவரின் அதிரடியால் லக்னோ அணி 20 ஓவர்களில் 199 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்தது. பஞ்சாப் அணிதரப்பில் ஷாம் கரண் அதிகபட்சமாக நான்கு ஓவர்கள் பந்து வீசி 28 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் 20 ஓவர்களில் 200 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு 11 ஓவர்களில் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியை அறிமுக வேகப்பந்துவீச்சாளர் ஆன மயங்க் யாதவ் பிரித்தார். தனது துல்லியமான வேகத்தால் பேர்ஸ்டோவின் விக்கெட்டை காலி செய்தார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய ப்ரப் சிம்ரன் 19 ரன்களில் இவரது பந்துவீச்சிலயே வெளியேறினார். பஞ்சாப் அணி பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்தில் பந்துகளை வீணடித்தல் இறுதிக்கட்டத்தில் அவர்களால் ரன்கள் குவிக்க முடியாமல் போனது. இதனால் 20 ஓவர்களில் 178 ரன்கள் மட்டுமே குவித்தனர். தோல்விக்கு பஞ்சாப் அணி கேப்டன் தவான் கூறுகையில்
“அவர்கள் விளையாடிய விதம் அருமையாக இருந்தது. லிவிங்ஸ்டன் எதிர்பாராத விதமாக காயமடைந்தார் இல்லையெனில் அவர்தான் நான்காம் வரிசையில் களமிறங்கி இருப்பார்.

- Advertisement -

நாங்கள் ஆரம்பித்த விதம் அருமையாக இருந்தது. ஆனால் மயங்க் அவரது வேகத்தில் நன்றாக வீசிக் கொண்டிருந்தார். அவரை எதிர்கொள்வது நன்றாக இருந்தது. அவர் பந்து வீசிய விதம் உண்மையிலேயே எனக்கு ஆச்சரியம் அளித்தது. ஆனால் அவரின் வேகத்தை நான் அவருக்கு எதிராகவே பயன்படுத்த விரும்பினேன். ஆனால் அவர் யார்க்கர்களையும், பவுன்சர்களையும் மிக அற்புதமாக வீசினார். நான் மிகவும் கவனமாக பேட்ஸ்மேன்களை அவருக்கு எதிராக ஷார்ட் சைடைப் பயன்படுத்த சொன்னேன். ஆனால் அவர் பந்துகளை நேராக உடம்புக்கு வீசி பேர்ஸ்டோவின் விக்கட்டை காலி செய்தார்.

இதையும் படிங்க:அறிமுக வீரரின் வேகத்தில் சரிந்த பஞ்சாப்.. லக்னோ அணி அபாரம்.. சொந்த மண்ணில் முதல் வெற்றி

முசின்கான் நன்றாகவே பந்து வீசினார். அவர் துல்லியமான வேகத்தில் எங்களை திணறடித்தார். எனவே இந்த தோல்வி எங்களுக்கு ஒரு நல்ல பாடம் எனவே இதிலிருந்து கற்றுக் கொண்டு மீண்டு வர முயற்சிப்போம்” என்று கூறினார். லக்னோ அணி முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு தனது சொந்த மைதானத்தில் இரண்டாவது போட்டியில் வெற்றி கணக்கு தொடங்கியுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles