அறிமுக வீரரின் வேகத்தில் சரிந்த பஞ்சாப்.. லக்னோ அணி அபாரம்.. சொந்த மண்ணில் முதல் வெற்றி

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 11வது ஆட்டத்தில் பூரன் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியும், தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

- Advertisement -

லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. லக்னோ அணிக்கு கேப்டனாக கேஎல் ராகுலுக்கு பதில் நிக்கோலஸ் பூரான் தலைமை தாங்கினார். இதன்படி லக்னோ அணியில் பேட்டிங் தொடங்கிய கேஎல் ராகுல் மற்றும் டி காக் ஆகியோர் அதிரடியாக தொடங்கினர்.

- Advertisement -

ஒன்பது பந்துகளை எதிர்கொண்ட ராகுல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசி 15 ரன்களில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார். டி காக் ஒரு முனையில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருக்க, பின்னர் வந்த படிக்ல் ஒன்பது ரன்களிலும், ஆல்ரவுண்டர் ஸ்டாய்னிஸ் 19 ரன்களிலும் வெளியேறினர். விக்கெட்டுகள் விரைவாக விழுந்ததால் அதற்குப் பிறகு களம் இறங்கிய கேப்டன் நிக்கோலஸ் பூரான் விக்கெட் சரிவினை தடுத்து நிறுத்தி அதிரடியாக ரன்கள் குவிக்க தொடங்கினார்.

- Advertisement -

21 பந்துகளை எதிர்கொண்ட அவர் மூன்று பவுண்டரிகள், மூன்று சிக்சர்களை விளாசி 42 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டு சென்றார். மற்றொரு முனையில் நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த டி காக் 38 பந்துகளில் 54 ரன்கள் குவித்த நிலையில், ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னர் வந்த ஆல் ரவுண்டர் க்ருனால் பாண்டியா இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடி லக்னோ அணியின் ரன் ரேட்டை உயர்த்தினார் 22 பந்துகளை எதிர்கொண்ட அவர் நான்கு பவுண்டரிகள், இரண்டு சிக்சர்களை விளாசி 43 ரன்கள் குவித்தார்.

இதனால் லக்னோ அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. பின்னர் 200 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்க ஆட்டக்காரர்கள் தவான் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்துச் சென்றனர். அருமையாக விளையாடிய இந்த ஜோடி 102 ரன்களில்தான் முதல் விக்கெட் பறி கொடுத்தது.

- Advertisement -

பேர்ஸ்டோ 29 பந்துகளில் 42 ரன்கள் குவித்து அறிமுகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவின் அபார வேகத்தில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னால் வந்த வீரர்கள் ரன்கள் குவிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கட்டுகளை இழந்து தடுமாறினர். இதனால் தவான் ஒரு நிதானமாக நின்று விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆல்ரவுண்டர் சாம் கரன் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார். பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் மட்டுமே கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 17 பந்துகளில் 28 ரன்கள் குவித்தார்.

இதையும் படிங்க :ஓபனிங் டூப்ளஸ்சிஸ் வேண்டாம்.. இந்த இந்திய வீரருக்கு பதிலா இவர எடுங்க.. முன்னாள் தேர்வு குழு தலைவர் பேச்சு

இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க முடியாததால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 178 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. தனது முதல் போட்டியில் லக்னோ அணிக்காக விளையாடிய மயங்க் யாதவ் நான்கு ஓவர்கள் பந்து வீசி 27 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles