ஓபனிங் டூப்ளஸ்சிஸ் வேண்டாம்.. இந்த இந்திய வீரருக்கு பதிலா இவர எடுங்க.. முன்னாள் தேர்வு குழு தலைவர் பேச்சு

கடந்த 16 வருடங்களாக எவ்வளவோ முயற்சித்தும் ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த முறை நடந்து முடிந்த ஏலத்தின் போதே பெங்களூர் அணியின் பந்துவீச்சு மிகவும் சுமாராக இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்தனர்.

- Advertisement -

இருப்பினும் இந்த கருத்துக்களை பொய்யாக்கும் வகையில் பெங்களூர் அணி சிறப்பாக செயல்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவிய பெங்களூர் அணி, இரண்டாவது போட்டியில் விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் அதிரடியில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் பெங்களூரரின் சொந்த மைதானமான சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் ஓரளவு சவாலான ஸ்கோர் ஆன 182 ரன்கள் குவித்தும் அந்த அணியால் சிறிது கூட நெருக்கடியை கொடுக்க முடியவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எளிதாக 17 ஓவர்களிலேயே 182 ரன்கள் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. பந்துவீச்சுதான் இவ்வளவு மோசமாக இருக்கிறது என்றால் பேட்டிங்கிலும் வலுவாக இருந்த பெங்களூர் அணி தற்போது சொதப்பி வருகிறது.

- Advertisement -

கடந்த சீசனில் காயம் அடைந்துள்ள பட்டிதார் இந்த சீசனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மூன்று போட்டிகளில் விளையாடி வெறும் 21 ரன்கள் மட்டுமே குவித்திருக்கிறார். மேலும் அணியின் கேப்டனான பாப் டு ப்ளஸ்சிக்கு மூன்று ஆட்டங்களில் ஒன்று கூட சரியாக கிளிக் ஆகவில்லை. இந்த நிலை பெங்களூர் அணியில் இப்படியே நீடிக்குமானால் கோப்பையை வெல்வது இல்லை பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாது என்று பல முன்னாள் வீரர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவரான ஸ்ரீகாந்த் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ல் வர்ணனையாளராக பேசும்பொழுது பட்டிதார் மற்றும் அல்சாரி ஜோசப்பை பிளேயிங் லெவனில் இருந்து நீக்குமாறும், அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். இது குறித்து அவர் கூறும் பொழுது
“பெங்களூர் அணி இனி வெற்றி பெற வேண்டுமானால் டூப்ளஸ்சிஸ் இனி மூன்றாவது வரிசையில் களம் இறங்க வேண்டும்.

- Advertisement -

தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலி உடன் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த வில் ஜாக்ஸ் களமிறங்க வேண்டும். கேமரூன் கிரீன் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் 4 மற்றும் ஐந்தாவது இடங்களில் களமிறங்க வேண்டும். பட்டிதார் மற்றும் அல்சாரி ஜோசப்பை தூக்கி விட்டு, அவர்களுக்கு பதிலாக ஆகாஷ் தீப் மற்றும் வில் ஜாக்ஸ் ஆகியோரை எடுக்க வேண்டும்.

இதையும் படிங்க :விராட் கோலிக்கு இது தேவையில்லாத வேலை.. இவர் அமைதியா இருந்தாலே போதும்.. டி20 உலக கோப்பை குறித்து உத்தப்பா ஓப்பன் டாக்

மேலும் ஒரு அணி என்றால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமநிலை உடையதாக இருக்க வேண்டும். கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரேனுக்கு பெங்களூர் அணி பந்து வீச்சாளர்கள் ஒரு பவுன்சர் கூட வீசவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. சுனில் நரேனை அட்டாக்கிங் கிரிக்கெட் விளையாட அனுமதித்தால் மட்டுமே விக்கெட் விழ நேரிடும்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles