தோனி இருக்கும் வரை அந்த பேச்சுக்கே இடமில்லை.. இந்தியாவே அவருக்கு சொந்தம்தான் – ஜாகிர் கான் பேட்டி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிக்கு இந்த முறை இந்திய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ஜாகிர் கான் மகேந்திர சிங் தோனி மற்றும் லக்னோ அணி குறித்து சில முக்கிய கருத்துக்கள் கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனி அதிக வயது கொண்ட வீரராக விளையாடுகிறார். தோனிக்கான ரசிகர் பட்டாளம் சென்னையில் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மைதானங்களிலும் இருக்கிறது. எந்த அணி விளையாடினாலும் அங்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறத்தில் ஆன ஜெர்சியை ரசிகர்கள் அணிந்து கொண்டு தோனியின் மீது இருக்கும் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது ரசிகர்கள் அதிக அளவில் மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்து கொண்டு ஆதரவளித்தனர். அப்போது இது சென்னை மைதானமா? அல்லது லக்னோ மைதானமா? என்கிற கேள்வி எழுகிற அளவுக்கு ரசிகர்களின் ஆதரவு இருந்தது. இந்த சூழ்நிலையில் ஆலோசகர் ஜாஹிர் கானிடம் இந்த முறை மைதானம் நீல நிறத்தில் காட்சியளிக்குமா? அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்குமா? என்று கேட்கப்பட்டது.

அதற்கு ஜாகிர்கான் பதில் அளிக்கும் விதமாக ” ஐபிஎல் தொடரில் தோனி விளையாடும் வரை எல்லா மைதானங்களிலும் மஞ்சள் நிறமே ஆதிக்கம் செலுத்தும். அப்படித்தான் நடக்க வாய்ப்பு உள்ளது. அவர் அனைவராலும் விரும்பக்கூடிய ஒரு வீரராக இருக்கிறார். இதன் காரணமாக சிஎஸ்கே அணி எந்த மைதானத்தில் விளையாடினாலும் அது மஞ்சள் கடல் போலத்தான் காட்சியளிக்கும். ஐபிஎல் தொடரை பொருத்தவரை வீரர்களின் காயம் என்பது நிச்சயமற்ற தன்மையாகவே இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க:பிசிசிஐ சொன்னதால் சஞ்சு சாம்சனை கேப்டன் பதவியில் இருந்து தூக்கியது ராஜஸ்தான் அணி.. புதிய கேப்டனாக ரியான் பராக்.. கடைசி நேரத்தில் பரபரப்பு

தற்போது எங்கள் பயிற்சியாளர் குழுவில் இருப்பவர்கள் வேகப்பந்துவீச்சாளர்கள் உடன் சேர்ந்து வேலை செய்து வருகின்றனர். எங்கள் அணியில் மொத்தம் 24 வீரர்கள் இருக்கிறார்கள். எனவே போட்டிகளை எப்படி வெல்ல வேண்டும் என்பது குறித்து தெரியும்” என்று ஜாகிர் கான் பேசியிருக்கிறார். லக்னோ அணிக்கு இந்த முறை ரிஷப் பண்ட் 27 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டு இருக்கிறார் அதுமட்டுமல்லாமல் அவரே கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு இருக்கிறார். மேலும் இந்த முறை அணிக்கு வலுவான வீரர்களை வாங்கி லக்னோ அணி திறமையாக கட்டமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles