தொடர் தோல்வியால் தவிக்கும் மும்பை அணி.. மும்பையால் பாதிப்படைந்த சிஎஸ்கே.. லக்னோ அணி எளிதில் வெற்றி

ஐபிஎல் தொடரின் 48வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த லக்னோ அணி மும்பை அணியை வீழ்த்தியது.

- Advertisement -

லக்னோ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு சற்று சுலபமாக இருக்கும் என்று எண்ணத்தில் மும்பையை பேட்டிங் செய்ய அழைத்தது. இதற்கு லக்னோ மணிக்கு கை மேல் பலனும் கிடைத்தது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு ரோகித் சர்மா நான்கு ரன்களிலும், சூரியகுமார் யாதவ் 10 ரன்களிலும், திலக் வர்மா ஏழு ரன்களிலும், ஹர்டிக் பாண்டியா டக் அவுட் ஆகியும் வெளியேறினார். இதனால் நெருக்கடிக்கு உள்ளான மும்பை அணிக்கு இசான் கிசான் மற்றும் நெகல் வதேரா ஜோடி 53 பந்துகளில் 53 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தது.

- Advertisement -

இசான் கிசான் 32 ரன்களில் அவுட் ஆக, வதேரா 46 ரன்கள் வெளியேறினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. லக்னோ அணித்தரப்பில் சிறப்பாக பந்து வீசிய மோசின் கான் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதை அடுத்து வெற்றி இலக்கை நோக்கி லக்னோ அணி களம் இறங்கி விளையாடியது. லக்னோ அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தனது முதல் போட்டியில் வாய்ப்பு பெற்ற அர்சின் குல்கர்னி தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். அதற்குப் பிறகு ஒன் டவுனில் களமிறங்கிய மார்க்கஸ் ஸ்டானிஸ் மற்றும் கே எல் ராகுல் ஜோடி சிறப்பாக விளையாடியது.

- Advertisement -

சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 40 பந்துகளில் 58 ரன்கள் குவித்தது. கே எல் ராகுல் 22 பந்துகளில் 28 ரன்கள் குவித்தார். ஸ்டானிஸ் 45 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் இரண்டு சிக்சர்கள் என குவித்து 62 ரன்கள் விளாசி வெளியேறினார். இறுதி ஓவர் வரை சென்ற இந்த போட்டியில் நிக்கோஸ் பூரான் கடைசிவரை ஆட்டம் இழக்காமல் 14 பந்துகளில் 14 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.

இதையும் படிங்க:அடி தூள்.. தளபதி விஜய்யின் ‘கோட்’ படத்தில் நடித்துள்ள சிஎஸ்கே வீரர்கள்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. முழு விபரம்

பத்து போட்டிகளில் ஆறு வெற்றி பெற்று லக்னோ அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியும், மூன்றாவது இடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்றாவது இடத்திலும், 10 போட்டிகளில் 7 போட்டிகளில் தோல்வியை தழுவிய மும்பை அணி ஒன்பதாவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. மும்பை அணியின் பிளே ஆப் கனவு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்றே தான் சொல்ல வேண்டும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles