நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி மற்றும் 5 போட்டிகளில் தோல்வியை தோல்வி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் சிஎஸ்கே அணி குறித்து சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருத்துராஜ் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடி வெற்றி பெற்றது. ஆனால் அதற்குப் பிறகு வரிசையாக 4 போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கும் நிலையில் கேப்டன் காயம் காரணமாக தொடரை விட்டு வெளியேற, அவருக்கு பதிலாக எம்எஸ் தோனி கேப்டன் பொறுப்பை ஏற்றார். அவர் பொறுப்பேற்ற பின்னர் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தாலும் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் விஜய் சங்கர், மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை விளையாடிய போட்டிகளில் அவர் இரண்டு முறை மட்டுமே இரட்டை இலக்க எண்களை அவர் அடைந்திருக்கும் நிலையில் இனி அடுத்தடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், விஜய் சங்கர் சிஎஸ்கே வெற்றி பெறுவதற்கு உதவ மாட்டார் எனவும் அவரது சேவை அணி வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை கொடுக்க மட்டுமே உதவும் என்று காட்டமான கருத்துக்களை முன் வைத்திருக்கிறார். அதேபோல ரவிச்சந்திரன் அஸ்வினும் ஒரு சில போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டால் தான் அவரது நிலைமை தற்போது என்ன என்று அவருக்கு புரியும் என்று ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:ஆட்டத்தை திருப்பிய மிட்சல் ஸ்டார்க்.. சூப்பர் ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி.. ராஜஸ்தானுக்கு சோகம்
மீண்டும் சிஎஸ்கே அணி வெற்றிப் பாதைக்கு திரும்பி இருக்கும் நிலையில் ஏழு போட்டிகளில் இதுவரை இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளது. எனவே மீதமுள்ள ஏழு போட்டிகளில் ஆறு போட்டிகள் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

