“நானோ கோலியோ பும்ராவோ கிடையாது.. இவர்தான் உலக கோப்பையில் முக்கியமானவர்” – ரோகித் சர்மா தைரியமாக வெளிப்படையாக அறிவிப்பு!

அடுத்த மாதம் இந்த நேரத்திற்கு எல்லாம் இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டி ஆரம்பித்திருக்கும். இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியுடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதிக்கொண்டிருக்கும்!

- Advertisement -

இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு சில நாட்களுக்கு முன்பு இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் சில விமர்சனங்கள் இருந்தாலும், அணியில் எடுக்கப்பட்ட வீரர்களை வைத்து பார்க்கும் பொழுது, தேர்வு செய்யப்பட்ட அதற்கான நியாயங்களும் இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் தேர்வு செய்யப்பட்ட அணி எப்படி இருக்கிறது? தேர்வு செய்யப்பட்ட அணியில் யார் முக்கியமான வீரராக இருப்பார்? அடுத்த இரண்டு மாதங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? ஒரு நாள் கிரிக்கெட் வடிவம் எப்படியான சில சலுகைகளைத் தருகிறது? என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மனம் திறந்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ரோஹித் சர்மா கூறும் பொழுது “ஹர்திக் பாண்டியாவின் பார்ம் எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டும் செய்யக்கூடிய வீரர். அது முக்கியமானது. கடந்த ஓராண்டில் அவருடைய பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மிக நன்றாக இருந்து வருகிறது.

கடைசியாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவருடைய தரத்தை நீங்கள் பார்த்தீர்கள். இஷானும், ஹர்திக்கும் அணிக்காக தங்கள் கைகளை உயர்த்தி மிகவும் சிறப்பாக செயல்பட்டார்கள். வெளிப்படையாக அவர் பந்து வீச்சிலும் மிகச் சிறப்பானவர். கடந்த ஒன்றரை வருடங்களாக அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

கடந்த ஆட்டத்தில் அவர் பேட்டிங் செய்த விதம் அவருடைய முதிர்ச்சியை காட்டியது. இது எங்களுக்கு மிகவும் நல்ல அறிகுறி. 50 ஓவர் கிரிக்கெட் வடிவம் வேறுபட்ட ஒன்று. மொத்தம் 9 லீக் போட்டிகள் மற்றும் அரையிறுதி, இறுதிப்போட்டி என மொத்தம் 11 போட்டிகள் இருக்கின்றன. எனவே நீங்கள் மீண்டு வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

ஒரு குழுவாக வியூகப்படி நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்பதைப் பற்றி சிந்திக்க இந்த வடிவத்தில் நேரம் உண்டு. டி20 வடிவத்தில் உங்களுக்கு குறைவான நேரமே இருக்கிறது. ஆமாம் உங்களுக்கு ஒருநாள் கிரிக்கெட் வடிவம் சுவாசிக்க கொஞ்சம் நேரம் தருகிறது.

சமநிலையான மற்றும் ஆழமான அணியைப் பெற்றதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். விளையாடும் அணியில் 3 ஆல்ரவுண்டர்கள் மற்றும் 4 பந்துவீச்சாளர்கள், 6 பேட்டர்கள் உள்ளனர். நாங்கள் இந்த அணியை நிறைய யோசித்து உருவாக்கி இருக்கிறோம். இதுவே எங்களுக்கான சிறந்த கலவை. வெளியில் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. அணியில் உள்ள எல்லா வீரர்களும் தொழில்முறை வல்லுனர்கள். இதையெல்லாம் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். இதெல்லாம் பெரிய வித்தியாசத்தை!” ஏற்படுத்தாது என்று கூறி இருக்கிறார்!

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles