மும்பை எப்படி இதை மிஸ் பண்ணாங்கன்னு தெரியல.. அதுதான் எங்களுக்கு சாதகமா அமைஞ்சது.. வெற்றிக்குப் பின் கிளாசன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முதல் வெற்றியை வலுவான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பதிவு செய்திருக்கிறது. மேலும் ஐபிஎல் வரலாற்றில் பெங்களூர் அணி அடித்த 263 ரன்கள் என்ற அதிகபட்ச சாதனையை முறியடித்து இருக்கிறது.

- Advertisement -

தனது சொந்த மைதானமான ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் களம் இறங்கிய ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 277 ரன்கள் குவித்தது. பேட்டிங்கிற்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் ஆரம்பம் முதலே ஹைதராபாத் அணி ரன் வேகத்தை ஒரே மாதிரியாக எடுத்துச் சென்றது.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியும் பந்துவீச்சில் சில தவறுகளை செய்தது. அனுபவமே இல்லாத தென்னாபிரிக்க அணியின் அண்டர் 19 பிளேயர் மபாகாவை ஓபனிங் ஸ்பெல் வீச வைத்தது. அந்த இடத்தில்தான் ட்ராவிஸ் ஹெட் தனது அதிரடியைத் தொடங்கினார். மும்பை இந்தியன்ஸ் அணியில் வலுவான வேகப்பந்துவீச்சாளரான பும்ரா
இருக்கும்போது இளம் வீரரை ஏன் பந்து வீச பாண்டியா அனுமதித்தார் என்று கேள்வி எழுகிறது. அதுவும் ஆட்டத்தின் முக்கியமான பவர் பிளேவில் பும்ரா ஒரே ஒரு ஓவரை மட்டுமே வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஹைதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட்(62), அபிஷேக் ஷர்மா(63) கிளாசன்(80), மார்க்ரம்(40) ஆகியோரின் அதிரடியால் ஹைதராபாத் அணி 277 ரன்கள் குவித்தது. 2013ஆம் ஆண்டு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் 263 ரன்கள் சாதனையை இந்த போட்டியின் மூலம் ஹைதராபாத் அணி முறியடித்தது.

பின்னர் 278 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி முடிந்தவரை களத்தில் போராடியது. ஹைதராபாத் அணியின் பவுலர்கள் இறுதியில் ரன்களை கட்டுப்படுத்தியதால் அந்த அணியால் 248 ரன்களே குவிக்க முடிந்தது. வெற்றிக்குப் பின்னர் ஹைதராபாத் அணிக்கு இறுதிக்கட்டத்தில் அதிரடியாக ரன்களைக் குவித்த கிளாசன் பேசும்போது
“மும்பை அணியினர் பவர் பிளேவில் பும்ராவை பந்து வீசா அனுமதிக்கவில்லை. அங்குதான் அவர்கள் தந்திரத்தை தவறவிட்டதாக நான் உணர்கிறேன்.

- Advertisement -

நாங்கள் எங்கள் அணியில் சிறந்த ஸ்டிரைக்கர்கள் பெற்றுள்ளோம். ஆனால் மும்பை அணியினர் சிறந்த பந்துவீச்சாளர்களை பெற்றும் அதனை சரியாக பயன்படுத்தவில்லை. அணிக்கு சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்தது என்னால் நம்ப முடியாத வகையில் இருந்தது. நான் விளையாடிய இன்னிங்ஸ்களில் இது ஒரு அற்புதமான இன்னிங்ஸ்” என்று கூறி இருக்கிறார்.

ஏற்கனவே முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ள மும்பை அணிக்கு இரண்டாவது போட்டியும் தற்போது தோல்வியில் முடிந்துள்ளது. மேலும் அணியில் வீரர்களுக்கு இடையேயும் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் தென்படுகிறது. எனவே இவற்றை களைந்து மும்பை அணி மீண்டும் வலுப்பெற்று வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles