ராகுல் நீங்க செஞ்சது தப்பு… எப்போதும் டீம் தான் முக்கியம்… சுனில் கவாஸ்கர் காட்டமான விமர்சனம்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நெருங்கி வருவதை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் களம் சூடு பிடித்திருக்கிறது. இந்தப் போட்டி தொடருக்கு தயாராகும் வகையில் கிரிக்கெட்டின் தலைசிறந்த 8 அணிகளும் பல்வேறு விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தொடங்கி இருக்கின்றன. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முன்னோட்டமாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்த இரு அணிகளும் மோதிய முதல் ஒருநாள் போட்டி நாக்பூர் மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் கில் மிகச் சிறப்பாக விளையாடி 87 ரன்கள் எடுத்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக இந்திய அணியின் பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்சித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்து அணியை குறைந்த ஸ்கோரில் ஆல் அவுட் செய்ய உதவினர்.

- Advertisement -

இந்திய அணியின் துவக்க வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த போதும் நடுவரிசை வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது. சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் சிறப்பாக விளையாடி அரை சதமடித்தனர். மேலும் இந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்ட கேஎல்.ராகுல் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இந்நிலையில் அவர் விளையாடிய விதம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் கடுமையான விமர்சனத்தை பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களத்திற்கு வந்த கேஎல் ராகுல், ஆதில் ரஷீத் பந்து வீச்சில் 2 ரன்கள் எடுத்த நிலையில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இது சுனில் கவாஸ்கரை கடும் அதிருப்தியடையச் செய்தது. இது தொடர்பாக பேசியிருக்கும் கவாஸ்கர் கிரிக்கெட் போன்ற குழு விளையாட்டில் ராகுல் ஆடிய விதம் மிகவும் தவறானது என தெரிவித்திருக்கிறார். ராகுல் பேட்டிங் செய்ய வந்தபோது சுப்மன் கில் 82 ரன்களுடன் ஆடிக்கொண்டிருந்தார். மேலும் அணியின் வெற்றிக்கு 28 ரன்களை தேவைப்பட்டதால் கில் சதத்தை நிறைவு செய்ய வேண்டும் என கேஎல் ராகுல் நிதானமாக விளையாடினார்.

இது சுனில் கவாஸ்கரை கோபமடைய செய்திருக்கிறது. இது தொடர்பாக போட்டியின் போது நேரலையில் பேசிய கவாஸ்கர், ராகுல் தன்னுடைய நேச்சுரல் கேமை விளையாட வேண்டும். அதனைத் தவிர்த்து கில் சதமெடுக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு அதிகமான ஸ்ட்ரைக் கொடுக்க முயற்சி செய்கிறார். கிரிக்கெட் போன்ற குழு விளையாட்டுகளில் இவ்வாறு செயல்படக் கூடாது. எந்த சூழ்நிலையில் இருந்தாலும் தங்களுடைய நேச்சுரல் கேமை விளையாட வேண்டும் என தெரிவித்தார்.

- Advertisement -

கவாஸ்கர் பேசிய சிறிது நேரத்தில் ராகுல், ஆதில் ரசீத் பந்து வீச்சில் 1 ரன் எடுக்க முயன்ற போது அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனை சுட்டிக்காட்டி பேசிய கவாஸ்கர், நான் சொன்னது போலவே நடந்து விட்டது. இது ஒரு டீம் விளையாட்டு. தனிநபரின் சாதனை முக்கியம் என்றாலும் அணியை தான் முதலில் பிரதானப்படுத்த வேண்டும். கில் சதமெடுக்க வேண்டும் என்பதற்காக விளையாடி கேஎல் ராகுல் 2 ரன்னில் ஆட்டம் இழந்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என கோபத்துடன் தெரிவித்தார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles