இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரானது நாளை முதல் நடைபெற உள்ள நிலையில் இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். இதில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஒரு நாள் தொடரில் விளையாடும் நன்மைகள் குறித்து அணியின் கேப்டன் கே எல் ராகுல் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து கே.எல் ராகுல் கூறும்போது “பவுண்டரி அடிப்பதை போலவே ஒரு நாள் கிரிக்கெட்டில் சிங்கிள் ரன் எடுப்பது என்பது மிகவும் முக்கியமானது. இதனை விராட் கோலி மிகவும் திறமையாக செய்து வருகிறார். இந்தத் தொடரில் நாங்கள் முன்னேறி செல்வது குறித்து அவருடன் தீவிரமாக பேசி வருகிறோம். அவர் மீண்டும் எங்களுடன் இருப்பது மிகவும் நல்ல விஷயமாகும்.
இதையும் படிங்க:விராட் ரோஹித்னால பல நாள் நான் தூங்கல.. என் ஆதரவு அவங்களுக்கு தான்.. கம்பீருக்கு எதிராக கருத்து கூறிய இந்திய பவுலிங் கோச்
எந்த ஒரு காலகட்டத்திலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரின் இருப்பு என்பது மிகவும் முக்கியமானது. அவர்கள்தான் ட்ரெஸ்ஸிங் ரூமில் மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்குகிறார்கள். அவர்கள் வெற்றி பெறுவதற்கான ஊக்கத்தை வழங்குகிறார்கள், நாங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு நடைபெற்ற டெஸ்ட் தொடரை மறக்க விரும்புகிறோம்” என்று கே எல் ராகுல் பேசியிருக்கிறார்.

