விராட் ரோஹித்னால பல நாள் நான் தூங்கல.. என் ஆதரவு அவங்களுக்கு தான்.. கம்பீருக்கு எதிராக கருத்து கூறிய இந்திய பவுலிங் கோச்

2027 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் ஒரு நாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில் அதற்காக இந்திய அணி தீவிரமாக ஆயத்தமாகி வருகிறது. இந்த சூழ்நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் விளையாடுவது குறித்து பரிசளிக்கப்படும் என்கிற ரீதியில் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியிருந்தார்.

- Advertisement -

ஏற்கனவே டி20 கிரிக்கெட் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஓய்வு பெற்றிருக்கும் நிலையில், ஒருநாள் கிரிக்கெட் தொடரிலாவது உலகக் கோப்பை வரை விளையாட வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கருத்துக்கள் வருகின்றன. இருப்பினும் இது குறித்து தலைமை தேர்வு குழு தலைவரான அஜித் அகர்கர் இவர்கள் இருவரும் உறுதியாக விளையாடுவார்களா? என்று கூற முடியாது. ஆனால் இது குறித்து பரிசீலிக்கப்படும் என்கிற ரீதியில் பேசி இருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கூறும்போது ” விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவருக்கும் எதிராக நான் விளையாடிய போது பல நாட்கள் தூக்கம் இல்லை இரவுகளை கழித்திருக்கிறேன். எனவே அவர்கள் இருவருக்கும் எதிராக தயாரிப்புகள் எப்படி இருக்கும் என்று எனக்கு நன்றாக தெரியும். என்னை கேட்டால் அவர்கள் இருவரும் ஒரு நாள் உலகக் கோப்பை வரை விளையாட வேண்டும் என்று நான் நிச்சயமாக அவர்களுக்கு ஆதரவு அளிப்பேன்” என்று பேசி இருக்கிறார். அதாவது பயிற்சியாளர் கம்பீர் மற்றும் அஜித் அகர்க்கர் இருவரும் இருவர் விளையாடுவது குறித்து உறுதியான கருத்துக்கள் தெரிவிக்காத நிலையில் பவுலிங் கோச் ஆதரவாக பேசி இருப்பது ஒரே அணிக்குள் எதிரெதிர் கருத்துக்கள் இருப்பது உறுதியாக இருக்கிறது என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles