கேஎல் ராகுலுக்கு இருக்கும் பிரத்யேக திறமை.. அவர் அவுட்டாகும் வரை நிம்மதியாக இருக்காது.. ஆஸ்திரேலியா ஜாம்பவான் அதிரடி கருத்து!

ஐபிஎல் தொடரில் அறிமுகமான பின் விளையாடிய 2 ஆண்டுகளிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி கவனம் ஈர்த்துள்ளது லக்னோ அணி. அதேபோல் ஆர்சிபி அணியுடனான மோதல், நவீன் உல் ஹக் சர்ச்சை என்று ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமான அணியாக மாறுவதற்கான அத்தனை விஷயங்களையும் எல்எஸ்ஜி அணி மேற்கொண்டு வருகிறது.

- Advertisement -

அதேபோல் ஐபிஎல் மினி ஏலத்தில் சிவம் மாவி ரூ.6.4 கோடிக்கும், தமிழக வீரர் சித்தார்த்தை ரூ.2.40 கோடிக்கும், டேவிட் வில்லி ரூ.2 கோடிக்கும், டர்னர் ரூ.1 கோடிக்கும், அர்ஷின் குல்கர்னி ரூ.20 லட்சத்திற்கும், அர்ஷ்த் கான் ரூ.20 லட்சத்திற்கும் எல்எஸ்ஜி அணி நிர்வாகம் வாங்கியது. அதேபோல் தேவ்தத் படிக்கலை ட்ரேட் மூலம் அணிக்குள் கொண்டு வந்துள்ளது.

- Advertisement -

இதனால் அடுத்த சீசனில் லக்னோ அணி பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக இருக்கும். அதேபோல் அடுத்த சீசனில் லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இதன் காரணமாகவே படிக்கலை ட்ரேட் மூலமாக லக்னோ அணி வாங்கியதாக கூறப்படுகிறது.

- Advertisement -

ஒருவேளை கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் களமிறங்கினால், லக்னோ அணியை வீழ்த்துவது எதிரணிகளுக்கு சாதாரணமாக இருக்காது. ஏனென்றால் கடைசி நேரத்தில் கேஎல் ராகுல் களமிறங்கினால் ஸ்பின், வேகம் என்று எந்த பவுலர் வீசினாலும் வெளுத்து கட்டுவார். இந்திய அணிக்காக ஆடும் போது கேஎல் ராகுலின் அதிரடி வேற மாதிரி இருக்கும்.

அதனால் லக்னோ அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதேபோல் அந்த அணியின் புதிய பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் இணைந்துள்ளார். முதல்முறையாக ஐபிஎல் அணிக்கு பயிற்சியாளராக செயல்படுவதால், தனது தடத்தை நிச்சயம் பதிக்க விரும்புவார் ஜஸ்டின் லாங்கர்.

- Advertisement -

இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் அளித்துள்ள பேட்டியில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் உடன் நீண்ட நேரம் ஆலோசனை செய்தேன். அவர் மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு பயிற்சி கொடுத்த அனுபவம் குறித்து கூறினார். அதேபோல் ஐதராபாத் அணிக்கு பயிற்சியளித்த டாம் மூடியிடமும் பேசினேன். ஐபிஎல் தொடர் மிகப்பெரியது. சரியாக சொல்ல வேண்டுமென்றால், ஒலிம்பிக்கை போன்றதாகும்.

ஒவ்வொரு போட்டியும் கோடிக்கணக்கான ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இம்முறை லக்னோ அணியுடன் இணைந்து பங்கேற்க ஆவலாக இருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்கு பயிற்சி கொடுத்த நாட்களில் இந்திய அணியின் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் ஆட்டமிழந்தால் மட்டும் நிம்மதியாக இருக்கும். ஏனென்றால் கேஎல் ராகுல் ஸ்பின் மற்றும் வேகம் இரண்டையும் அசால்ட்டாக விளாசுபவர். அவர் லக்னோ அணிக்கு கேப்டனாக இருப்பதும், அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கும் ஆவலாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles