பும்ராவால் நிச்சயமாக இது முடியாது என்று நினைத்தேன்.. ஆனால் நான் நினைத்தது தவறு என்று உணர்த்திவிட்டார்.. கபில்தேவ் பேட்டி

டி20 உலக கோப்பை இந்திய கிரிக்கெட் அணி அற்புதமாக செயல்பட்டு மூன்று வெற்றிகளை தொடர்ச்சியாகப் பெற்று தற்போது அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

- Advertisement -

இந்த வெற்றிகளுக்கு பந்துவீச்சில் மிக முக்கிய காரணமாக அங்கம் வகிப்பவர் பும்ரா. இந்த அற்புதமான பந்துவீச்சின் மூலம் தான் நினைத்தது தவறு என்று நிருபித்ததாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறி இருக்கிறார்.

- Advertisement -

டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய வீரர் பும்ராவின் பந்துவீச்சு அபாரமாக இருந்து வருகிறது. முதல் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக குறைந்த ரன்களை இந்தியா கட்டுப்படுத்த முயன்ற போது மூன்று மிக முக்கிய விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

டி20 உலக கோப்பையில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் ஆட்டநாயகன் விருது பெற்ற முதல் வீரர் என்ற பெருமையையும் பும்ரா பெற்றார். குறைந்த தூரத்தில் ஓடி வந்து வேகப்பந்து வீச்சு வீசுவதனால் தனது தோள்பட்டையில் அழுத்தம் ஏற்பட்டு 2022ஆம் ஆண்டு பும்ரா மிகப்பெரிய காயத்தை சந்தித்தார். ஆனால் தற்போது அதே பந்து வீச்சு ஆக்சனை வைத்து உலகின் நம்பர் ஒன் பௌலராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் கேப்டனுமான கபில்தேவ் கூறும்பொழுது
“பும்ராவால் நிறைய கிரிக்கெட் போட்டியில் விளையாட முடியும் என்று நான் நினைக்கவில்லை. அது மிகவும் கடினமாக இருக்கும் என்று நினைத்தேன். ஏனென்றால் மிகக்குறைந்த தூரத்தில் ஓடி வந்து வீசும் போது அவரது உடலிலும், தோள்பட்டையிலும் அழுத்தம் ஏற்படக்கூடும். ஆனால் நாம் நினைத்தது தவறு என்று நிரூபித்த அவர் தற்போது இதே பந்துவீச்சு ஆக்ஷனை வைத்துக்கொண்டு உலகின் நம்பர் ஒன் வந்து வீச்சாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

இதற்காக சில நேரங்களில் அவர் அதற்கான விலையை கொடுத்து ஆக வேண்டும். இருப்பினும் இது போன்ற காயத்தை அவர் தொடர்ந்து சந்திக்கும் போது கடினமாக இருக்கும்” எனவும் கூறி இருக்கிறார். 2022ஆம் ஆண்டு பும்ரா மிகப்பெரிய காயத்தை சந்திக்கும் பொழுது பாகிஸ்தான் அணியின் முன்னால் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் “பும்ரா நீண்ட காலம் கிரிக்கெட் விளையாட வேண்டுமானால் அவர் ஏதேனும் ஒரு வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்றும், இல்லையென்றால் தனது பந்துவீச்சு அக்ஷனை மாற்ற வேண்டும் எனவும் கூறி இருந்தார்.

இதையும் படிங்க:எங்கள் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது.. நாங்கள் செய்த சிறு தவறு தான் தோல்விக்கு காரணம்.. அமெரிக்க கேப்டன் ஜோன்ஸ் பேட்டி

ஆனால் இவை அனைத்தையும் தற்போது பும்ரா பொய்யாக்கி விட்டு உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக தற்போது இருக்கிறார். இந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றினால் பந்துவீச்சுத் துறையில் மிக முக்கிய காரணமாக பும்ரா இருப்பார் என்று இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles