எங்கள் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது.. நாங்கள் செய்த சிறு தவறு தான் தோல்விக்கு காரணம்.. அமெரிக்க கேப்டன் ஜோன்ஸ் பேட்டி

இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அமெரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது.

- Advertisement -

இந்த தோல்விக்கான காரணம் குறித்து அமெரிக்க அணியின் கேப்டன் ஜோன்ஸ் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் டாசை இழந்த அமெரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததாலும் மேலும் இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சினாலும் அமெரிக்கா அணியால் 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. அமெரிக்க அணியை பொறுத்தவரை என் ஆர் குமார் 27 ரன்களும், ஸ்டீபன் டெய்லர் 24 ரன்கள் குவித்தனர்.

- Advertisement -

இந்திய அணி தரப்பில் பந்துவீச்சில் ஹர்ஸ்தீப் சிங் 4 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஒரே ஓவரில் இவர் எடுத்த இரண்டு விக்கெட் இந்திய அணிக்கு ஆட்டம் சாதகமாக மாற உதவியது. பின்னர் வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கி விளையாடியது. அமெரிக்க அணியும் 10 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணிக்கு அழுத்தம் கொடுத்தது.

ஆனால் சூரியகுமார் யாதவ் மற்றும் சிவம்தூபெ ஜோடி மிடில் ஆர்டரில் நிலைத்து நின்று இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். சூரியகுமார் யாதவ் 50 ரன்கள், சிவம் தூபே 31 ரன்களும் குவித்தனர். பின்னர் இந்த தோல்விக்கான காரணம் குறித்து அமெரிக்க அணியின் கேப்டன் ஜோன்ஸ் சில முக்கிய காரணங்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

தோல்விக்கான காரணம் குறித்து அவர் கூறும் பொழுது
“நாங்கள் இன்னும் பத்து முதல் 15 ரன்கள் குவித்திருந்தால் இந்திய அணிக்கு இலக்கு மிகக் கடினமாக மாறி இருக்கும். எங்கள் பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியில் மிக அற்புதமாக பந்து வீசினார்கள். எங்களின் பந்துவீச்சு ஒழுக்கம் குறித்து நான் பெருமைப்படுகிறேன். இந்த ஒழுக்கத்தை தான் நாங்கள் அமெரிக்க கிரிக்கெட்டுக்கு தொடர்ந்து செய்ய விரும்புகிறோம்.

இதையும் படிங்க:என்னால இப்படியும் விளையாட முடியும்னு அவர் காட்டியிருக்கிறாரு.. இங்க கிரிக்கெட் அவ்வளவு ஈஸி இல்ல.. ரோகித் சர்மா பேட்டி

நாங்கள் இந்த தோல்வி குறித்து சில விஷயங்களை ஆராய வேண்டும். சில ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி தோல்வியில் இருந்து மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பி வருவோம். இந்தப் போட்டியில் ஆடுகளம் கொஞ்சம் ட்ரிக்காக இருந்தது. அதனால் நாங்கள் முழுவதுமாக வேகப்பந்து வீச்சை பயன்படுத்தினோம். இந்த காரணத்தால் தான் நாங்கள் ஸ்பின்னர்களை பயன்படுத்தவில்லை. மோனாங்க் பட்டேல் அடுத்த போட்டிக்கு தகுதி பெற்று விடுவார் என்று நினைக்கிறேன்” என்று கூறி இருக்கிறார். இந்திய அணி தனது கடைசி போட்டியில் கனடா அணியை எதிர்கொள்ள உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles