என்னால இப்படியும் விளையாட முடியும்னு அவர் காட்டியிருக்கிறாரு.. இங்க கிரிக்கெட் அவ்வளவு ஈஸி இல்ல.. ரோகித் சர்மா பேட்டி

இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகளுக்கிடையேயான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

- Advertisement -

வெற்றிக்கான முக்கிய காரணங்கள் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா போட்டி முடிந்த பின்னர் பேட்டி அளித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய அமெரிக்கா அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே குவித்தது. காரணம் இந்த முறையும் நியூயார்க் ஆடுகளம் முழுக்க முழுக்க பந்து வீச்சுக்கு சாதகமாகவே இருந்தது. இருப்பினும் அமெரிக்க அணியில் அதிகபட்சமாக என் ஆர் குமார் 27 ரன்கள் குவித்தார். இந்திய அணித் தரப்பில் பந்துவீச்சில் கலக்கிய அர்ஸ்தீப் சிங் 4 ஓவர்களில் ஒன்பது ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

இதை அடுத்து இந்திய அணி வெற்றி இலக்கை நோக்கி விளையாடியது. தொடக்க விக்கெட்டுகள் மிக விரைவிலேயே வெளியேறினாலும் பண்ட் ஓரளவு நிதானமாக விளையாடினார். பின்னர் இறுதிக்கட்டத்தில் சூரியகுமார் யாதவ் மற்றும் சிவம் டூபே ஜோடி இந்திய அணியை வெற்றி பெற வைத்தது. சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 49 பந்துகளில் 50 ரன்கள், சிவம் தூபே 35 பந்துகளில் 31 ரன்களும் குவித்தனர்.

இந்த வெற்றிக்குப் பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறும் பொழுது
“இந்த இலக்கு எங்களுக்கு கடினமாக இருக்கும் என்றும் முன்பே தெரியும். தொடக்க விக்கெட்டுகள் விரைவிலேயே வீழ்ந்தாலும் நல்ல பாட்னர்ஷிப் அமைந்தால் வெற்றி பெற்று விடலாம் என்று நினைத்தோம். சூரியகுமார் யாதவ் மிகவும் முதிர்ச்சியாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார். சிவம் தூபேவும் அற்புதமாக செயல்பட்டார்.

- Advertisement -

இந்த ஜோடிக்கு எனது வாழ்த்துக்கள். அமெரிக்கா அணியில் விளையாடும் பல வீரர்கள் எங்களோடு இணைந்து விளையாடி இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கடினமாக உழைக்கக் கூடியவர்கள். அவர்கள் இந்த அளவு முன்னேற்றம் கண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பந்து வீச்சில் அர்ஸ்தீப் சிங் சிறப்பாக பந்துவீசி இருக்கிறார். இங்கு ரன்கள் குவிப்பது சிரமம் என்பதால் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க:பேட்டிங்கில் சூரியகுமார் யாதவ்.. பந்து வீச்சில் அர்ஸ்தீப் சிங்.. சூப்பர் 8 சுற்றை உறுதி செய்தது இந்திய அணி

அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கே கிரிக்கெட் விளையாடுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. நாங்கள் வெற்றி பெற்ற மூன்று போட்டியிலும் அடிப்படை விஷயங்களை பின்பற்றினோம். சூரியகுமார் யாதவ் தன்னால் இப்படியும் விளையாட முடியும் என்று காட்டியிருக்கிறார். இது அவரது முதிர்ச்சியை காட்டுகிறது. ஆட்டத்தை ஆழமாக எடுத்துச் சென்று அணியை வெற்றி பெற வைத்த பெருமை சூரியகுமார் யாதவையே சேரும்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles