பேட்டிங் ஆர்டர்ல இந்தியா பெரிய தப்பு பண்ணிருக்கு.. அதனால வெற்றி வாய்ப்பு எங்களுக்குதான்.. கம்ரான் அக்மல் பேட்டி

அமெரிக்காவின் நியூயார்க் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே டி20 உலக கோப்பை போட்டி நாளை நடைபெற உள்ளது. இப்போட்டி இரு நாட்டு ரசிகர்களுக்கிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்திய உத்வேகத்தில் அடுத்த போட்டியில் களமிறங்குகிறது. ஆனால் பாகிஸ்தான் அணி அமெரிக்க அணிக்கு எதிரான சூப்பர் ஓவரில் அடைந்த தோல்விக்கு பிறகு வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.

- Advertisement -

இரண்டு அணிகளிலும் வேகப்பந்து வீச்சு சரிசமமான விகிதத்தில் இருப்பதால், வெற்றி வாய்ப்பு இரண்டு அணிகளுக்குமே சமமாக இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள். டி20 உலகக் கோப்பையைப் பொறுத்த வரை இதுவரை நடந்த போட்டிகளில் இந்திய அணியின் கையே மேலோங்கி இருக்கிறது. காரணம் 2021ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பையை தவிர மற்ற அனைத்து இந்தியா, பாகிஸ்தான் போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

கடந்த 2022ஆம் ஆண்டு விராட் கோலி ஒரே ஆளாக நின்று பாகிஸ்தானை வீழ்த்திய சம்பவம் அனைவருக்கும் நினைவு இருக்கலாம். மேலும் அமெரிக்கா அணியுடன் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் அணி அழுத்தத்திலேயே களமிறங்கும். ஆனால் தற்போது இந்திய அணியின் மாற்றியமைக்கப்பட்ட பேட்டிங் ஆர்டர் வரிசையால் பாகிஸ்தானுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து கம்ரான் அக்மல் விரிவாக கூறும் பொழுது
“இந்திய அணியின் பேட்டிங் வரிசை சீராக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. விராட் கோலி மூன்றாம் வரிசையில் களம் இறங்கினால் மட்டுமே அழுத்தத்தை உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக பினிஷிங் செய்து முடிப்பார். அதுவே இந்திய அணியை பொறுத்தவரை மிகவும் முக்கியமானது. ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விராட் கோலி மூன்றாம் வரிசையில் களமிறங்க வேண்டும்.

- Advertisement -

ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓபனிங் களமிறங்கினால் ஏதேனும் ஒரு இடத்தில் கண்டிப்பாக சிக்கக்கூடும். விராட் கோலி மூன்றாம் வரிசையில் களமிறங்கி நங்கூரமாக நின்று ஆட்டத்தை முடித்துக் கொடுப்பார். அந்த வகையில் விராட் கோலி தற்போது ஓப்பனிங்கில் களமிறக்கி இந்தியா தவறு செய்து விட்டதாகவே நான் உணர்கிறேன். இருப்பினும் இந்தியா தற்போது மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.

இதையும் படிங்க:எனக்கும் சஞ்சு சம்சனுக்கும் பிரச்சனையா?. மனம் திறக்கும் ரிஷப் பண்ட்

அந்த அணியில் பும்ரா மிகச் சிறந்த பந்துவீச்சாளராக இருக்கிறார். மேலும் சிராஜும் தற்போது நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஹர்திக் பாண்டியாவும் இப்போது நல்ல முறையில் விக்கெட்டுகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்திய அணிக்கு மூன்று போட்டிகளும் ஒரே மைதானத்தில் நடைபெறுவது சாதகமான விஷயமாகும். இது போன்ற முக்கிய போட்டிகளை
நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தரமான மைதானங்களை அமைக்க வேண்டும். இல்லையெனில் ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி விடும்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles