இந்த 2 இந்திய வீரர்கள் அவுட் ஆகாமல் எனக்கு தூக்கமே வராது.. ஜஸ்ட்டின் லங்கர் வெளிப்படைப் பேச்சு.. !

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகவும் வெற்றிகரமான அணியாக வலம் வருகிறது. கோப்பைகளை அழுத்தம் இல்லாமல் மிகவும் சுலபமாக வெல்வர். அதற்க்கு சிறந்த உதாரணமாக 2023ஆம் ஆண்டையேக் கைக் காட்டலாம்.

- Advertisement -

2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி தென்னாபிரிக்கா டெஸ்ட்டில் பந்தைச் சேதப்படுத்திய புகாரில் சிக்கியது. ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னர் ஒரு ஆண்டு அணியை விட்டு சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இனிமேல் ஆஸ்திரேலிய அணி அவ்வளவு தான் என பலர் எதிர்பார்த்தனர். அதன் பின்னர் தலைமை பயிற்சியாளராக ஜஸ்ட்டின் லாங்கர் பொறுப்பேற்றார்.

- Advertisement -

மெல்ல ஆஸ்திரேலிய அணியை முன்னது போல தலை நிமிர வைக்க உழைத்தார். ஆஷஸ், டி20 உலகக் கோப்பை என அடுத்தடுத்து வென்றார். இங்கு சூடுப் பிடித்த அணி அதனைத் தொடர்ந்து மறுபடியும் ஓர் ஆஷஸ், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக் கோப்பை என கோப்பைகளைக் குவித்தது.

- Advertisement -

ஜஸ்டின் லாங்கர் அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட போது தன் மேல் தாக்கத்தை ஏற்படுத்திய இரு இந்திய வீரர்கள் குறித்துப் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “ இந்திய அணியுடனான சீரிஸின் போது விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் விக்கெட் போகும் வரை என்னால் ரிலாக்ஸ் செய்யவே முடியாது. அதிலும் ராகுல் சற்று ஆபத்தான வீரர். ”

மேலும், “ கே.எல்.ராகுல் லக்னோ அணியில் இருப்பது எனக்கு பெரிய சந்தோஷம். அவர் ஸ்பின் & பேஸ் இரண்டையுமே அதிரடியாக அணுகும் வீரர். ” என்றார். அண்மையில் கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்படும் லக்னோ அணியின் பயிற்சியாளராக சேர்ந்துள்ளார். அதன் பின்னர் தான் இச்செய்திகளைப் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

இடையில் கே.எல்.ராகுல் ஃபார்ம் அவுட் ஆகி பின்னர் காயத்தால் அணியை விட்டு விலகினார். ஆசியக் கோப்பையில் திரும்பி வந்த அவர் மீண்டும் அதிரடியான வீரராக திரும்பியுள்ளார். பின்னர் உலகக் கோப்பை, தற்போது தென்னாபிரிக்காவில் சதம் என நல்ல ஃபார்மை தொடர்ந்து வருகிறார். இதே வேகத்தில் போனால் ஐ.பி.எலிலும் ராகுல் ஒரு கைப் பார்துவிடுவார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles