“ஜஸ்ட் மிஸ்.. இது மட்டும் நடந்திருந்தா இந்தியாவ தோற்கடித்திருப்போம்” – நேபாள் கேப்டன் ஏமாற்றமான பேச்சு!

கிரிக்கெட் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கிரிக்கெட்டை கண்டுபிடித்தது ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த இங்கிலாந்தாக இருந்தாலும், கிரிக்கெட்டில் அதிக ஆதிக்கத்தை செலுத்திய அணியாக ஆஸ்திரேலிய இருக்கிறது. மேலும் ஒரு காலத்தில் அசைக்கவே முடியாத அணியாக வெஸ்ட் இண்டீஸ் இருந்தது!

- Advertisement -

இந்த காலகட்டத்தில் கிரிக்கெட் மிக அதிகமாக பரவி வரும் வேளையில், ஆசியாவில் சர்வதேச தரம் வாய்ந்த வீரர்கள் மற்றும் அணிகள் வேகமாக உருவாகி வருகின்றன. இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஆப்கானிஸ்தான் அணியின் எழுச்சி!

- Advertisement -

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 16வது ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஐந்து அணிகள் நேரடியாகத் தகுதி பெற்று இருக்க ஆறாவது அணியாக பங்கு பெறுவதற்கான தகுதி சுற்றில் விளையாடி இறுதிப்போட்டியில் யுனைடெட் அரபு எமிரேடு அணியை வீழ்த்தி நேபாள் அணி வந்திருக்கிறது.

- Advertisement -

ஆசிய கண்டத்தில் இருந்து ஒரு புதிய வளரும் கிரிக்கெட் அணி உலக கிரிக்கெட்டுக்கு கிடைத்திருக்கிறது. நேற்று அவர்கள் இந்தியாவுடன் விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. ஆரம்பகட்ட பேட்ஸ்மேன்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதன் காரணமாக யாரும் எதிர்பார்க்காத வகையில் 230 ரன்கள் நேபாள் அணி சேர்த்தது.

பின்பு விளையாடிய இந்திய அணி விக்கெட் எதையும் இழக்காமல் மழையின் காரணமாக 23 ஓவர்களுக்கு 145 ரன்கள் அடிக்க வேண்டிய காரணத்தினால், அந்த இலக்கை வேகமாக 20 ஓவர்களில் எட்டி வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது.

- Advertisement -

இந்த போட்டியில் நேபாள் அணி தோல்வி அடைந்திருந்தாலும் கூட, ஆசிய கோப்பை தொடரை விட்டு வெளியேறி இருந்தாலும் கூட, டெஸ்ட் அந்தஸ்து பெற்ற மிகப்பெரிய அணிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக விளையாடியது மிகப்பெரிய அனுபவமாக அமைந்திருக்கும். அதே சமயத்தில் அவர்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆரம்பப் பந்துவீச்சிலும், இந்தியாவுக்கு எதிராக ஆரம்ப பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு இருந்தார்கள்.

நேற்று போட்டி முடிவுக்கு பின் பேசிய நேபால் அணியின் கேப்டன் ரோகித் புர்டெல் “எங்களுடைய துவக்க ஆட்டக்காரர்கள் எங்களுக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். மிடில் ஆர்டரில் நாங்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம். அப்படி செயல்பட்டு இருந்தால் நாங்கள் 260 முதல் 270 ரன்கள் பெற்றிருக்கலாம்.

கடந்த நான்கு ஐந்து மாதங்களில் எங்களது பேட்டிங் ஆர்டரின் கீழ் விளையாடுபவர்கள் மிகச் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளார்கள். நாங்கள் அவர்கள் குறித்து பெருமைப்படுகிறோம். இந்த சூழ்நிலையில் பனிப்பொழிவின் காரணமாக பந்து வீசுவது மிகவும் கடினமாக இருந்தது என்று நான் நினைக்கிறேன். ஆனாலும் எங்கள் பந்துவீச்சாளர்கள் நன்றாகவே செயல்பட்டார்கள்!” என்று கூறியிருக்கிறார்!

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles