5 போட்டிகளுக்கு பும்ரா வரமாட்டார்.. தவிக்கும் மும்பை உரிமையாளர் அம்பானி.. மாற்று வீரரை தேடும் பல்தான்ஸ்!

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த வார இறுதியில் தொடங்கவுள்ளது. அதற்காக 10 அணிகளின் ஐபிஎல் அணி வீரர்களும் சிறப்பாக தயாராகி வருகின்றனர். ஏற்கனவே சிஎஸ்கே அணியின் தோனி நேற்று சென்னை அணியின் பயிற்சி முகாமில் இணைந்து கொண்டார். அதேபோல் ஜடேஜா, பதிரானா உள்ளிட்டோரும் இணைந்துவிட்டனர்.

- Advertisement -

மற்றொரு நட்சத்திர அணியான மும்பை இந்தியன்ஸ் அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. கேப்டன் ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா, போல்ட், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்தந்த அணிகளின் ரசிகர்களும் உற்சாகமாக அவர்களின் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். 

- Advertisement -

பும்ரா காயம்

- Advertisement -

இருப்பினும் மும்பை அணியின் ரசிகர்கள் மட்டும் சோகத்துடன் இருக்கிறார்கள். ஏனென்றால் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா காயம் காரணமாக இதுவரை பயிற்சியில் ஈடுபடவில்லை. சிட்னி மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பும்ரா காயம் காரணமாக 2வது இன்னிங்ஸில் பவுலிங் செய்யவில்லை. 

அதன்பின் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா இல்லாமலேயே இந்திய அணி களமிறங்கி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. இருந்தாலும் ஐபிஎல் தொடருக்கு பும்ரா சரியாக தயாராகுவார் என்று கூறப்பட்டது. ஆனால் பும்ரா இன்னும் பவுலிங் செய்யவே தொடங்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. அவர் முதுகில் ஏற்பட்ட பிரச்சனை இதுவரை முழுமையாக குணமடையவில்லை.

- Advertisement -

5 போட்டிகளுக்கு பும்ரா இல்லை

இதனால் பயிற்சியில் இருந்து விலகி பும்ரா குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வருகிறார். இதன் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் 5 போட்டிகளில் பும்ரா விளையாட வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது. ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே பும்ரா மும்பை அணியுடன் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மும்பை அணி ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

ஏற்கனவே அதிகமாக நம்பிக்கை வைத்து வாங்கப்பட்ட அல்லா கசன்ஃபர் காயம் காரணமாக விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக முஜீப் உர் ரஹ்மானை மும்பை அணி ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது பும்ராவின் இடத்தில் எந்த இந்திய பவுலர் கொண்டு வரப்படுவார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles