மறைக்க விரும்பல.. இந்த இந்திய வீரரைப் பார்த்துதான் பௌலிங் கத்துக்கிட்டேன்.. ஆண்டர்சன் ஓபன் டாக்

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே நான்கு டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் ஏழாம் தேதி தொடங்க உள்ளது. இதில் ஏற்கனவே இந்திய அணி 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி விட்டது.

- Advertisement -

இங்கிலாந்து அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் கடந்த 22 ஆண்டுகளில் இங்கிலாந்து அணிக்காக 186 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 194 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இளமை துள்ளும் அதே வேகத்தோடு பந்தைத் துல்லியமாகவும், ரிவர்ஸ் ஸ்விங் செய்வதிலும் இளம் வீரர்களுக்கே சவால் விடுத்து வருகிறார். இன்னமும் இளம் பேட்ஸ்மேன்கள் கூட இவரின் பந்து வீச்சுக்கு தடுமாறித்தான் விளையாடுகிறார்கள்.

- Advertisement -

186 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இதுவரை 698 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இன்னும் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தும் நிலையில் 700 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஜேம்ஸ் ஆண்டர்சன் படைக்க உள்ளார். இது இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்தச் சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

நீண்ட காலம் இங்கிலாந்து அணிக்காக கிரிக்கெட் விளையாடி வரும் அவர், தனது உடலையும் மனதையும் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். இங்கிலாந்து அணியின் ஜாம்பவானான இவர் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் குறித்து சில சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது

“நான் தொடக்க காலத்தில் ஜாஹிர் கான் இடமிருந்து நிறைய விஷயங்களைப் பார்த்து கற்றுக் கொண்டுள்ளேன். அவர் பந்தை எப்படி ரிவர்ஸ் ஸ்விங் செய்கிறார் மற்றும் ஓடி வந்து எவ்வாறு பந்தை வீசுகிறார் என்பது போன்ற நிறைய தெளிவுகளை அவரிடம் இருந்து கற்றேன்.

- Advertisement -

அதைத்தான் நான் பின்நாட்களில் வளர்க்க முயற்சி செய்தேன். இங்கு அவருக்கு எதிராக சில முறை கிரிக்கெட் விளையாடியும் உள்ளேன்” என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியிருக்கிறார். இப்போது முகமது சமி, பும்ரா என குறிப்பிடத்தக்க வேகப்பந்து வீச்சாளர்கள் வந்தாலும், இந்தியாவின் அப்போதைய காலகட்டத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர் ஜாகிர் கான்.

ஒரு நாள் போட்டி, டெஸ்ட் கிரிக்கெட் என இந்தியாவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர். குறிப்பாக இந்தியாவின் பெரிய தொடர்களின் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பெருமை இவரையே சேரும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles