தோனியை தக்க வைக்க சிஎஸ்கே போடும் மாஸ்டர் பிளான்.. இது மட்டும் நடந்தா தோனி அடுத்த வருஷம் ஆடுவது உறுதி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆஸ்தான வீரரான மகேந்திர சிங் தோனி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? என்பது குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை தக்க வைக்க புதிய திட்டம் ஒன்றை தீட்டி உள்ளது. இதனை மட்டும் பிசிசிஐ ஏற்றுக்கொண்டால் தோனி அடுத்த ஆண்டு சிஎஸ்கேவுக்காக நிச்சயம் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஐபிஎல் தொடருக்கான மெகா ஆக்சன் இந்த வருட இறுதியில் நடைபெற உள்ளது. இதில் சில அணிகள் ஏழு முதல் எட்டு வீரர்களை தக்க வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை அளித்து வருகிறது. கோப்பையை வெல்லாத பஞ்சாப் போன்ற அணிகள் குறைந்த வீரர்களை மட்டும் தக்கவைக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும் மெகா ஆக்சனில் பெரும்பாலான வீரர்களை எடுக்க அனுமதி அளிக்குமாறு வலியுறுத்தியும் வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் ஐபிஎல்லின் முன்னணி அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த வருடம் மகேந்திர சிங் தோனிக்கு வெற்றியுடன் விடை கொடுக்க வேண்டும் என்ற வகையில் ஐபிஎல் நிர்வாகத்திற்கு புதிய கோரிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் கூட்டத்தில் சிஎஸ்கே அணி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி 5 வருடம் ஆன வீரர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறது. அதாவது அன் கேப்டு வீரர்களை குறைந்தபட்சமாக நான்கு கோடிக்கு தக்க வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் தோனியை குறைந்த விலைக்கு தக்க வைத்தால் கூட சிவம் துபேவை வெளியே விட்டு தோனியை ஏலத்தில் எடுத்தது போக மீதம் இருக்கும் பணத்தை தூபேவுக்கு செலவு செய்து வாங்கலாம்.

- Advertisement -

சிஎஸ்கே நிர்வாகம் மேற்கொண்டு இருக்கும் இந்த புத்தி கூர்மையான நகர்வு அனைவரையும் தற்போது ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் சமீபத்தில் தோனி அளித்த பேட்டியில் பிசிசிஐ தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை பொறுத்தே ஐபிஎல்லில் ஆடுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மகேந்திர சிங் தோனி கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:எனக்கு சப்போர்ட்டா இவங்க ரெண்டு பேர் இருக்கும்போது.. நான் இதைவிட வேற என்ன கேட்க முடியும் – ரவி பிஸ்னாய் பேட்டி

எது எப்படி இருந்தாலும் தோனி அடுத்த ஒரு வருடமாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்பதே சிஎஸ்கே நிர்வாகமும், சிஎஸ்கே ரசிகர்களும் விரும்பி இருக்கின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles