புதிய கேப்டன், புதிய பயிற்சியாளரோடு களமிறங்கிய இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் மூன்று போட்டிகளையும் வெற்றி பெற்று டி20 தொடரை முழுவதுமாக கைப்பற்றியுள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஸ்னாய் இந்திய அணி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக இந்திய அணியின் லெக் ஸ்பின்னர் ரவி பிஸ்னாய் அமைந்தார். மூன்று போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு 8.42 என்கிற பந்து வீச்சு எக்கானமியில் ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றி இந்திய அணியின் எதிர்கால சுழற் பந்துவீச்சாளராக அமைந்திருக்கிறார். முதல் போட்டியில் ஒரு விக்கெட்டும் இரண்டாவது போட்டியில் மூன்று விக்கெட்டுகளும், மூன்றாவது போட்டியில் இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் கில் ஆகியோர் தனக்கு உறுதுணையாக இருந்ததாக கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறும் போது “சூரியகுமார் யாதவ் தனது கேப்டன்ஷியில் சிறப்பாக செயல்படுகிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரிலும் நான் அவரது கேப்டன்ஷிப்பின் கீழ் விளையாடி இருக்கிறேன். அவர் சிறந்தவராக இருந்திருக்கிறார். கில்லின் கேப்டன்ஷிப்பும் அற்புதமாக இருந்திருக்கிறது.
ஒரு பந்துவீச்சாளராக அவர்கள் எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்திருக்கின்றனர். அவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்போது நீங்கள் இதைவிட வேறு எதையும் பெரிதாக அவர்களிடம் கேட்க முடியாது. சூரியகுமார் மற்றும் கில் ஆகியோர் எனக்கு உறுதுணையாக இருக்கின்றனர்” என்று கூறி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்திய அணியின் பயிற்சியாளராக தற்போது திகழும் கௌதம் கம்பீரோடு ஒரு நல்ல பிணைப்பு இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.
இது குறித்தும் அவர் கூறும் போது “நான் இரண்டு வருடங்களாக லக்னோ அணிக்காக விளையாடி வருவதால் எனக்கும் கௌதம் கம்பீருக்கும் இடையேயான பிணைப்பு நன்றாக உள்ளது. அவர் இப்போது என்னிடம் எதையும் மாற்றும் படி கேட்டதில்லை. நான் இதற்கு முன்பு எப்படி செயல்பட்டேனோ அதேபோல தற்போதும் செயல்படும்படி என்னிடம் கேட்டுக் கொண்டார். அவருடைய அறிவுரை அப்போதும் இப்போதும் எனக்கு பயனுள்ளதாகவே அமைந்திருக்கிறது.
இதையும் படிங்க:நம்ம பசங்க கிட்ட நான் சொன்னது இது தான்.. நான் கேப்டனா இருக்க விரும்பல – சூரியகுமார் யாதவ் பேட்டி
மேலும் இலங்கை அணி எப்போதும் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நன்றாக செயல்பட கூடியவர்கள். ஆனால் இப்போது அவர்களுக்குள் என்ன ஆனது என்று எனக்கு தெரியவில்லை. தொடக்கம் நன்றாக இருந்த போதும் மிடில் வரிசையில் அவர்களது பேட்டிங் சரிந்தது. அவர்கள் நல்ல சுழல் விளையாடும் அணியாகத்தான் இருந்தார்கள். ஆனா இப்போது எங்கோ தவறு நடந்துள்ளது” என்று கூறியிருக்கிறார்.

