இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுவதுமாக கைப்பற்றி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் வெற்றி குறித்து கேப்டன் சூரியகுமார் யாதவ் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கில், ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது ஆட்டத்தின் உதவியால் 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் குவித்தது. கில் 39 ரன்களும், ரியான் பராக் 26 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 25 ரன்கள் குவித்தனர். இலங்கை அணி தரப்பில் சுழற் பந்துவீச்சாளர் தீக்ஷானா மூன்று முக்கிய விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணி, தொடக்கத்தில் நன்றாக விளையாடிய போதும் இறுதிக்கட்டத்தில் மோசமான ஆட்டத்தை மீண்டும் வெளிப்படுத்தி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் குவித்து போட்டியை சமனில் முடித்தது. அதற்குப் பிறகு சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றிய நிலையில் இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
போட்டிக்கு பின்னர் சூரியகுமார் யாதவ் பேசும்போது “நான் கடைசி ஓவரை வீசியதை விட 48 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் இழந்திருந்த போது இளம் வீரர்கள் காட்டிய ஆட்டம் சிறப்பாக இருந்தது. இந்த ஆடுகளத்தில் 140 ரன்கள் குவித்தாலே போதுமானதாக இருக்கும் என்று நினைத்தேன். அதைத்தான் அணி வீரர்களிடமும் கூறினேன். நாம் நமது முழு இதயத்தோடு ஆட்டத்தில் வெளிப்படுத்தினால் வெற்றி பெற்று விடலாம் என்று கூறினேன்.
அணி வீரர்கள் காட்டும் நேர்மறையான ஆட்டம் மற்றும் ஒருவர் மற்றொருவர் மீது செலுத்தும் அக்கறை எனது வேலையை மிகவும் எளிதாக்குகிறது. நான் பேட்டிங் செய்ய வரும்போது எனக்கு கொஞ்சம் கூடுதல் அழுத்தம் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அதைக் கடந்து என்னை வெளிப்படுத்தவே நான் எப்போதும் முயற்சிக்கிறேன். நான் இந்தத் தொடருக்கு முன்பாகவே கூறியது போல நான் என்னை கேப்டனாக வெளிப்படுத்த விரும்பவில்லை. தலைவனாக வெளிப்படுத்த விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:சூரியகுமார் ரிங்கு சிங் காட்டிய மேஜிக்.. கோட்டை விட்ட இலங்கை.. திரில்லர் வெற்றி பெற்ற இந்திய அணி
இந்திய அணியை டி20 தொடரை முழுவதுமாக கைப்பற்றிய உள்ள நிலையில் அடுத்தது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. அதையும் முழுவதுமாக வென்று விட வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

