சூரியகுமார் ரிங்கு சிங் காட்டிய மேஜிக்.. கோட்டை விட்ட இலங்கை.. திரில்லர் வெற்றி பெற்ற இந்திய அணி

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி இறுதி கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு போட்டியை சமனில் முடித்தவுடன் சூப்பர் ஓவரில் வெற்றியும் பெற்றது.

- Advertisement -

இறுதிக்கட்டத்தில் இந்திய அணியின் சூரியகுமார் யாதவ் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தனர்.

- Advertisement -

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வரும் நிலையில், இதில் ஏற்கனவே இரண்டு டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சால் 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

- Advertisement -

பின்னர் வெற்றி பெறும் முனைப்போடு களமிறங்கிய இலங்கை அணி 15 ஓவர்கள் வரை ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனால் அதற்குப் பிறகு மறுபடியும் அடுத்த முதல் பந்துகளில் 30 ரன்கள் சேர்ப்பதற்குள் ஏழு விக்கெட்டுகளை பறிகொடுத்து. இதில் குறிப்பாக ஆட்டத்தின் 19 ஆவது ஓவரை வீசிய ரிங்கு சிங் ஒரு ஓவரில் மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

அதற்குப் பிறகு இருபதாவது ஓவரை வீசிய கேப்டன் சூரியகுமார் யாதவ் ஒரு ஓவரில் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் போட்டி சமனில் முடிவடைந்ததை அடுத்து சூப்பர் ஓவரில் வாஷிங்டன் சுந்தர் ஓவரை எதிர்கொண்ட இலங்கை அணி இரண்டு ரன்களுக்குள் இரண்டு விக்கெட்டுகள் பறிகொடுத்த நிலையில், மூன்று ரன்கள் குவித்தால் வெற்றி என்று இலக்குடன் பின்னர் பேட்டிங் களமிறங்கிய சூரியகுமார் யாதவ் பௌண்டரி அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி முழுவதுமாக கைப்பற்றி சாதனை படைத்தது. கௌதம் கம்பீர் மற்றும் சூரியகுமார் யாதவ் தலைமையிலான புதிய இந்திய அணிக்கு தொடக்கமே அற்புதமாக அமைந்திருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு எனக்கு இரண்டிலும் அசத்திய வாஷிங்டன் சுந்தர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இதையும் படிங்க:மீண்டும் ஏமாற்றிய சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கே வீரர் அபார பந்துவீச்சு.. பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா

சூரியகுமார் யாதவ் தலைமையிலான டி20 அணி தொடரை வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடர்களில் பங்கேற்க உள்ளது. இதில் விராட் கோலி மற்றும் முன்னணி வீரர்கள் இந்திய அணிக்கு திரும்ப உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles