அண்மையில் நடைபெற்ற டி20 உலக கோப்பைக்கு முன்பாக இந்த உலகக் கோப்பையோடு தான் ஓய்வு பெறப்போவதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அவர் கூறியதைப் போலவே இந்திய அணி உலகக் கோப்பை வென்றதும் தனது பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகி ஓய்வை அறிவித்திருக்கிறார். நல்லவேளையாக இந்திய அணி இந்த உலக கோப்பையை வெற்றி பெற்று அவருக்கு பிரியா விடை கொடுத்து வழி அனுப்பி இருக்கின்றனர். ஒரு வீரராக இந்திய அணியில் விளையாடிய போது எந்தவித ஐசிசி கோப்பையை வெல்லாத வருத்தத்தில் இருந்த டிராவிட், தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக விடை பெற இருக்கும் சமயத்தில் டி20 உலக கோப்பையை வென்றது அவருக்கு பெரிய ஆறுதலாக இருந்திருக்கும்.
ட்ராவிட் பணி அதிகமாக உள்ளதால் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க முடியவில்லை என்றும், அதனால் தான் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இருப்பினும் வருடத்தில் இரண்டு மாதங்கள் மட்டுமே நடைபெறும் ஐபிஎல் தொடருக்கு அவர் நிச்சயம் ஏதாவது ஒரு அணிக்கு பயிற்சியாளராக செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுல் டிராவிட் ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பயிற்சியாளராக இருந்தார். அதற்குப் பிறகு இந்திய அணியில் முழு நேர பயிற்சியாளர் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து அவரை தற்போது நான்கு ஐபிஎல் அணிகள் பயிற்சியாளராக பொறுப்பேற்குமாறு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.
முதலில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி கங்குலியிடம் பேச்சுவார்த்தை நடத்தி டிராவிட்டை அழைத்துள்ளதாக தகவல்கள் வெளிவருகிறது. இரண்டாவதாக மும்பை இந்தியன்ஸ் அணி நேரடியாக தொடர்பு கொண்டு பேசியதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் இவரிடம் பயிற்சியாளர் பதவிக்கு வருமாறு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:களத்தில் மயக்கம் போட்டு விழுவார்.. 2027 உலக கோப்பை வரை எல்லாம் அவரால் விளையாட முடியாது – ஸ்ரீகாந்த் பேட்டி
இந்த வருட இறுதியில் ஐபிஎல் மெகா ஆக்சன் நடைபெற இருப்பதால், அதற்கு முன்னதாகவே பயிற்சியாளரை நியமிக்கும் பணிகளில் ஐபிஎல் அணிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் டிராவிட்டை அதற்கு முன்னதாகவே பயிற்சியாளர் பதவியில் அமர்த்த இந்த நான்கு அணிகளும் போட்டி போட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ட்ராவிட் நன்கு சிந்தித்த பின்னரே எந்த அணிக்குச் செல்வது என்று முடிவெடுப்பார் என தகவல்கள் வெளிவந்துள்ளது. இருப்பினும் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கே செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கிரிக்கெட் வட்டாரத்தில்கூறப்படுகின்றன.

