இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்ற கையோடு விராட் கோலி ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றிருக்கும் நிலையில், முன்னாள் தேர்வு குழு தலைவர் ஆன ஸ்ரீகாந்த் 2027ம் ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் உலகக் கோப்பையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா விளையாடுவது குறித்து சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.
இந்திய அணியை பொறுத்தவரை தற்போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஜடேஜா ஆகியோர் சீனியர் வீரர்கள். இதனால் சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை வென்றதோடு மற்ற இரண்டு தொடர்களிலும் கவனம் செலுத்தும் வகையில் டி20 ஃபார்மேட்டிலிருந்து தங்களது ஓய்வு அறிவித்திருக்கின்றனர்.
இதனால் ஒரு நாள் தொடர்களில் இருவரும் கவனம் செலுத்துவார்கள் என்று கூறப்படும் நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா என்று இருவருக்குமே அடுத்த ஒரு நாள் உலகக் கோப்பைக்குள் வயதாகிவிடும். இந்த சூழ்நிலையில் அவர்களால் ஒரு நாள் உலகை கோப்பையில் பங்கு பெற முடியுமா? என்பது சந்தேகம் எழும் நிலையில் முன்னாள் தேர்வு குழு தலைவர் ஆன கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ரோகித் சர்மாவுக்கு தற்போது 37 வயது ஆவதால் அடுத்த உலக கோப்பையில் அவர் விளையாடவதற்குள் அவருக்கு 40 வயது ஆகிவிடும், என்றும் ஆனால் விராட் கோலி அவரை விட இரண்டு வயது குறைவானவர் மற்றும் உடல் தகுதியை பிட்டாக வைத்திருக்கிறார் என்ற காரணத்தால் அவர்கள் அடுத்த உலக கோப்பையை வரை விளையாட முடியும் என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து ஸ்ரீகாந்த் விரிவாக கூறும்பொழுது “கம்பீர் விராட் கோலி ரோகித் சர்மாவும் 2027ம் ஆண்டு உலகக் கோப்பை வரை நல்ல உடல் தகுதியுடன் இருந்தால் விளையாடுவார்கள் என்று கூறியிருக்கிறார். பயிற்சியாளர் ஆவதற்கு முன்பாக அவர்கள் சரியாக விளையாடவில்லை என்றால் அணியில் நீக்கப்படுவார்கள் என்று கூறியிருக்கும் இவர், தற்போது பயிற்சியாளர் ஆன பின்பு இது மாதிரி யூடர்ன் அடித்து பேசுகிறார்.
இதையும் படிங்க:விராட் கோலி கேரியரில் இந்த ஒன்னு மட்டும் தான் மிச்சம் இருக்கு.. அதையும் பண்ணிட்டா ஓவர் – யூனிஸ்கான் பேட்டி
ரோஹித் சர்மா நிஜமாகவே நல்ல வீரர்தான். அவருக்கு வயது தற்போது 37 அடுத்த உலக கோப்பை வருவதற்குள் அவருக்கு வயது 40 ஆகி விடும்.இதனால் ரோஹித் சர்மா 40 வயதில் உலகக் கோப்பை விளையாடுவது எல்லாம் என்னை பொறுத்தவரை செட் ஆகாது. அதையும் மீறி அவர் ஆடினால் களத்திலேயே மயக்கம் போட்டு விழலாம். ஆனால் விராட் கோலிக்கு எந்த சிக்கலும் கிடையாது. ரோகித் சர்மாவை விட 2 வயது விராட் கோலிக்கு குறைவு. நல்ல உடல் தகுதியோடும் இருப்பதால் விராட் கோலி நிச்சயமாக விளையாடுவார்” என்று கூறியிருக்கிறார்.

