கட்டாயத்தின் பெயரில்தான் ஜடேஜாவை ராஜஸ்தான் அணிக்கு மாத்தினாங்க.. வெளிவந்த திடுக் ரிப்போர்ட்

அடுத்த வருடம் 19வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு ஐபிஎல் அணியும் தங்களது தக்கவைப்பு வீரர்கள் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டு விட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜடேஜா டிரேடிங் செய்தது கட்டாயத்தின் பேரில் தான் நடந்தது என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது.

- Advertisement -

தனது ஐபிஎல் வாழ்க்கையை முதன்முதலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து துவங்கிய ரவீந்திர ஜடேஜா, அதற்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறி பல போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் வீரராக உருவெடுத்தார். அவருக்கும் சிஎஸ்கே அணிக்குமான பிணைப்பு மட்டுமல்லாது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கும் அவருடனான பிணைப்பு அதிகரித்தது என்று கூறலாம். இந்த சூழ்நிலையில் சஞ்சு சாம்சனை வாங்குவதற்காக ஜடேஜாவை எப்படி வெளியிடலாம் என்று ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வந்தனர்.

- Advertisement -

இதையும் படிங்க:வெறும் பேப்பர்ல மட்டும் தாங்க அவர் கேப்டன்.. ஆனா களத்துல எல்லாமே எம்எஸ் தோனிதான்.. அவர் இல்லாமல் அணுவும் அசையாது.. முன்னாள் வீரர் சர்ச்சை பேச்சு

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் நிர்வாகம் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளது. அதாவது இரண்டு அணிகளும் சமரசமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பிறகே வீரர்கள் பரிமாற்றம் நடந்ததாகவும், மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா தன்னை சேர்த்துக் கொள்ளுமாறு அவரே கேட்டார் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles