டி20 உலக கோப்பைக்கான 20 பேர் கொண்ட உத்தேச பட்டியலை தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் விக்கெட் கீப்பர்கள் ஆக சஞ்சு சாம்சன், கே எல் ராகுல் மற்றும் ரிசப் பன்ட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் இசான் கிசானுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
தற்போது இந்தியாவில் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் மே இறுதியில் இத்தொடர் முடிவடைகிறது. இதற்குப் பிறகு சில வாரங்களில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் டி20 உலக கோப்பை நடைபெற உள்ளது.
இந்த உலகக் கோப்பைக்காண இந்திய அணியை ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களைப் பொறுத்து எடுக்கப்படும் என்று அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இதையொட்டி அனைத்து அணிகளும் தற்போது வீரர்கள் தேர்வுக்கான பணிகளை முழு வீச்சில் தொடங்கியுள்ளனர்.
இதற்காக ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட் ஆகியோர் அஜித் அகர்க்கர் தலைமையிலான தேர்வு குழுவை சந்தித்து டி20 உலக கோப்பை காண இந்திய அணியை தேர்வு செய்வது குறித்து கலந்தாலோசித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் 20 பேர் கொண்ட இந்திய அணி வீரர்களின் உத்தேச பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த 20 பேர் கொண்ட உலகக் கோப்பை வீரர்களுக்கான விக்கெட் கீப்பர் பட்டியலில் காயத்திலிருந்து மீண்டு வந்த ரிஷப் பண்ட் மற்றும் அனுபவ வீரரான கேஎல் ராகுல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த மூவருமே தற்போது ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் இடம் பிடித்த ஜிதேஷ் ஷர்மா இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. காரணம் இந்த ஐபிஎல் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தும் தனது திறமையை முழுமையாக நிரூபிக்காததால் அவரது பெயர் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆன இசான்கிசானின் பெயரும் இந்த பட்டியில் இடம்பெறவில்லை என்று அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:அடுத்த ஆண்டு சிஎஸ்கேவில் ரோஹித் சர்மா?. அப்போ மும்பை இந்தியன்ஸ் அவ்ளோ தானா.. ரகசியம் உடைக்கும் பீடாக் பிரசன்னா
காரணம் அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனையை ஏற்று ரஞ்சித் தொடரில் விளையாட மறுத்ததால், பிசிசிஐ இந்த முடிவை எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இசான் கிசான் இந்த சீசனில் சிறப்பாகவே செயல்பட்ட போதிலும், அவரது பெயர் இடம்பெறவில்லை என்பது ரசிகர்களை சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

