மும்பை இந்தியன்ஸ் அணியில் தற்போது ஒரு பேட்ஸ்மேன் ஆக விளையாடி வரும் ரோகித் சர்மா அடுத்த ஆண்டு நடைபெறும் மெகா ஆக்சனில் நிச்சயமாக கலந்து கொள்வார் என்றும், மும்பை இந்தியன்ஸ் அணியில் இனி தொடர மாட்டார் என்றும் பிரபல முன்னணி இரண்டு அணிகள் அவரை ஏலத்தில் வாங்க வாய்ப்பு இருப்பதாக பிரபல கிரிக்கெட் வல்லுனரான பீடாக் பிரசன்னா தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை அதன் நிலவரம் என்பது அனைவரும் தற்போது அறிந்த விஷயமே. ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவிடமிருந்து கேப்டன் பதவியை பறித்து ஹர்திக் பாண்டியாவிடம் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு சீசனில் கேப்டன் பதவியை ஒப்படைத்தது.
இதன் விளைவு இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. இந்த ஐபிஎல்லில் கிட்டத்தட்ட 70 சதவீதம் அணிகள் வலுவாக இருக்க, இனி மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற விரும்பினால் பெரும்பாலும் போட்டிகளில் நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற வேண்டும்.
சமீபத்தில் மூன்று தோல்விகளால் துவண்டு போயிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி அதற்குப் பிறகு இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று எழுச்சி பெறுவது போல் தோன்றியது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து மீண்டும் தோல்வி பாதைக்கு திரும்பி இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்த வரை ரோகித் சர்மா ஒரு பேட்ஸ்மேன் ஆக மட்டுமே விளையாடிக் கொண்டிருக்கிறார்.
இக்கட்டான சூழ்நிலைகளில் சென்னை அணியில் தோனியை போல மும்பையில் ரோகித் சர்மா ஆலோசனைகள் வழங்குவதில்லை என்று தெரிகிறது. மேலும் விருப்பம் இல்லாமலே மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ரோஹித் சர்மா அடுத்த மெகா ஆக்ஷனில் கலந்து கொள்வார் என்றும், அவரை சிஎஸ்கே அல்லது ஆர்சிபி அணிகள் ஏலத்தில் வாங்க வாய்ப்பு இருப்பதாக பீடாக் கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் யூ டியூப் சேனலில் பேசிக் கொண்டிருந்தபோது பீடாக் கூறியதாவது
“ரோகித் சர்மா நிச்சயமாக அடுத்த ஆண்டு நடைபெறும் மெகா ஆக்ஷனில் கலந்து கொள்வார். சென்னை சூப்பர் கிங்ஸ் அல்லது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவரை நிச்சயம் ஏலத்தில் எடுக்கும். நிச்சயமாக அடுத்த ஆண்டு மும்பை அணியில் விளையாட மாட்டார்” என்று தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க:இதுவே தோனியோ கோலியோ அடிச்சிருந்தா பல மாசம் பேசுவோம்.. ஆனா இவரை கண்டுக்க மாட்டோம்.. ஹர்பஜன்சிங் விமர்சனம்
இதனைக் கேட்ட சென்னை மற்றும் பெங்களூர் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். திறமையான கேப்டனான ரோகித் சர்மா அடுத்த ஆண்டு பெங்களூரு அணிக்கு விளையாடினால் நிச்சயமாக ஆர்சிபி அணி கோப்பையை வெல்லும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

