இதுவே தோனியோ கோலியோ அடிச்சிருந்தா பல மாசம் பேசுவோம்.. ஆனா இவரை கண்டுக்க மாட்டோம்.. ஹர்பஜன்சிங் விமர்சனம்

இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ஆன ஹர்பஜன் சிங் இந்த சாதனையை தோனியோ அல்லது கோலியோ செய்திருந்தால் அவர்களைப் பற்றி பல மாதங்கள் பேசியிருப்போம். ஆனால் இவர் நிகழ்த்திய சாதனையைப் பற்றி எதுவும் பேச மாட்டோம் என்று தனது ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி குவித்த 223 ரன்கள் இலக்கை தனி ஒரு ஆளாக நின்று ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் சென்று, இறுதியில் வென்றும் கொடுப்பார் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த நட்சத்திர பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர்.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் சுனில் நரேனின் அபார சதத்தின் உதவியுடன் 223 ரன்கள் குவித்தது. எனவே இந்த கடின இலக்கை இரண்டாவதாக பேட்டிங் செய்யும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சேஸ் செய்து வெற்றி பெறுமா? என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு மாற்றாக முன்னணி வீரர்கள் அனைவரும் விரைவிலயே ஆட்டம் இழக்க, தொடக்க ஆட்டக்காரரான ஜாஸ் பட்லர் மட்டும் ஒரு திசையில் போராடிக் கொண்டிருந்தார். அவருக்கு ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் ரோமன் பவல் மட்டுமே சிறிது ஆறுதல் அளிக்க, தனி ஒரு வீரனாக தோல்வியின் விளிம்பில் இருந்த ஆட்டத்தை ஒற்றைக் கையால் இழுத்து பிடித்து வெற்றி பெற வைத்திருக்கிறார் இந்த வீரர்.

60 பந்துகளை எதிர்கொண்டு ஆறு பவுண்டரிகள், ஒன்பது சிக்ஸர்கள் என 107 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இப்படி ஒரு சாதனையை செய்திருக்கும் இந்த ஜாம்பவான் வீரரை சமூக வலைதளங்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் என யாரும் பெரிதாக கண்டுகொள்ளாத நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீர ஹர்பஜன் சிங் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் பொழுது
“மகேந்திர சிங் தோனியின் சிக்ஸர்கள் மற்றும் விராட் கோலியின் சதம் குறித்து பல மாதங்கள் பேசுவோம். ஆனால் நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடியிருக்கும் ஜாஸ் பட்லருக்கு பெருமை சேர்க்க மாட்டோம். ஜாஸ் பட்லர் ஒரு ஜாம்பவான் வீரர். அனைத்து பெருமைகளுக்கும் தகுதியானவர். ஐபிஎல் போட்டியில் மிகச் சிறந்த சதம் இதுவாகும் என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:ஹர்திக் பாண்டியா இல்லை.. இந்த இந்திய வீரரைத்தான் நாங்கள் அதிகம் மிஸ் செய்கிறோம்.. ரஷீத் கான் பேட்டி

இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆறு போட்டியில் வெற்றி பெற்ற புள்ளி பட்டியலில் தற்போது நம்பர் ஒன் இடத்தில் கம்பீரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles