இத்தனை கோடியா.. இந்திய வீரர்களின் பிசிசிஐ காண்ட்ராக்ட் சம்பள லிஸ்ட்.. இஷான் ஸ்ரேயாஸ் அதிரடி நீக்கம்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் அவர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப இந்திய கிரிக்கெட் வாரியம் தக்க வைப்பு ஒப்பந்தங்களின் படி அவர்களுக்கு சம்பளம் நிர்ணயித்து வருகிறது. அதில் கிரேட் ஏ ப்ளஸ், கிரேடு ஏ, கிரேட் பி, மற்றும் கிரேடு சி என்று நான்கு வகைகள் உள்ளன.

- Advertisement -

இந்த கிரேடு ஏ ப்ளஸ் பிரிவில் விராட் கோலி இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இரு இந்திய வீரர்கள் என நான்கு பேர் இந்தப் பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இது தவிர விராட் கோலி விளம்பரங்கள் மற்றும் ஐபிஎல் வருவாய் மூலம் அதிக ஊதியம் பெறும் கிரிக்கெட்டராக தற்போது முன்னணியில் இருக்கிறார். இவரைத் தவிர ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோர் விளம்பரங்களின் மூலம் அதிக வருவாய் ஈட்டுகின்றனர்.

- Advertisement -

கிரேடு ஏ பிரிவில் ஆர் அஸ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ், கே எல் ராகுல், ஷுப்மான் கில் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல கிரேட் பி பிரிவில்
சூர்ய குமார் யாதவ், ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், அக்சர் படேல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

- Advertisement -

கிரேடு சி பிரிவில் ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல், சிவம் துபே, ரவி பிஷ்னோய், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்திய வீரர்களின் ஒப்பந்தங்களின் அடிப்படையில் கிரேடு ஏ ப்ளஸ் பிரிவில் இடம் பெறும் வீரர்கள் ஏழு கோடி ஊதியம் ஆக பெறுகின்றனர்.

கிரேட் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்கள் 5 கோடி சம்பளமாகவும், பி பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்கள் மூன்று கோடி ஊதியமாகவும் சி பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்கள் ஒரு கோடி ஊதியமாகவும் பெறுகின்றனர். இதில் கிரேட் ஏ ப்ளஸ் பிரிவில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தவிர்த்து ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

- Advertisement -

ரவிந்திர ஜடேஜா அஸ்வினை விட அதிகம் ஊதியம் பெரும் கிரிக்கெட்டராக இருக்கிறார். ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் ஐந்து கோடி ஊதியமாகவும், ஏ பிளஸ் பிரிவில் இடம் பெற்றுள்ள ரவீந்திர ஜடேஜா ஏழு கோடி ஊதியமாகவும் பெறுகின்றனர். இதில் எதிர்பாராத விதமாக இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் பெயர்கள் சம்பள பட்டியலில் இடம்பெறவில்லை. அவர்கள் இருவரது பெயரையும் இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கி உள்ளது. இஷான் கிஷன் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது இடைவெளி எடுத்திருந்தார். இருவரது நீக்கத்திலும் முழுமையான காரணம் தெரியவில்லை.

அதுபோக இந்திய வீரர்கள் பங்கு பெரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டால் ஆட்டநாயகன் விருது மற்றும் தொடர் நாயகன் விருது என பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. அதுபோக இந்தியன் பிரீமியர் லீக் போன்ற பெரிய தொடர்களில் தொடர் நாயகன் விருதுக்கு கார் போன்ற பரிசுகள் அன்பளிப்பாகவும் வழங்கப்படுகிறது. இது தவிர விளம்பரங்களில் அதிக வருவாய் ஈட்டும் இந்திய வீரர்களும் உள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles