இது லிஸ்ட்லயே இல்லையேபா.. கம்பீரின் உலக கோப்பை இந்திய அணி.. 2 ஸ்டார் பிளேயரை அதிரடியாக நீக்கினார்!

மிக பிரம்மாண்டமாக அக்டோபர் ஐந்தாம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் போட்டியின் மூலமாக, 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் துவங்க இருக்கிறது!

- Advertisement -

இந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் தனிச்சிறப்பு என்னவென்றால், இதுவரை இந்தியாவில் நடத்தப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர்கள் சக ஆசிய நாடுகளுடன் பகிர்ந்துநடத்தப்பட்டு இருந்தது. இந்த முறை இந்தியாவில் முழுமையாக நடத்தப்பட இருக்கிறது.

- Advertisement -

நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கு பெறுகின்றன. எட்டு அணிகள் நேரடியாக தகுதி பெற, இரண்டு அணிகளுக்கு தகுதி சுற்று போட்டிகள் ஜிம்பாப்வே நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் வென்று தகுதி பெற்று இருக்கின்றன.

- Advertisement -

இந்த நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களின் உலகக்கோப்பை அணியை வெளியிட்டு இருக்கின்றன. இதில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மட்டுமே இன்னும் உலகக்கோப்பை இந்திய அணியை வெளியிடாமல் இருக்கிறது.

எப்பொழுதும் ஒரு உலகக்கோப்பை தொடருக்கு அணியை ஒரு மாதத்திற்கு முன்பு சரியாக அறிவிக்க வேண்டும் என்பது ஐசிசி விதியாக இருக்கிறது. எனவே அக்டோபர் ஐந்தாம் தேதி உலகக் கோப்பைத் தொடர் துவங்க இருப்பதால், இந்த மாதம் செப்டம்பர் 5ஆம் தேதி அதாவது நாளை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தனது உலகக்கோப்பை அணியை அறிவித்தாக வேண்டும்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போது கிரிக்கெட் கமெண்ட்ரி செய்து வரும் கௌதம் கம்பீர் தனது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அணியை அறிவித்து இருக்கிறார். இதில் அதிரடியாக தற்போது இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் உலகக் கோப்பை அணியில் இருக்கும் வீரர்களான ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ஷர்துல் தாகூரை நீக்கி இருக்கிறார். மேலும் தமிழக வீரர் ஒருவருக்கு இடமளித்து இருக்கிறார்.

கௌதம் கம்பீரின் இந்திய ஒருநாள் உலகக் கோப்பை அணி:

ரோஹித் சர்மா (கே), சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல் (வி.கீ.), இஷான் கிஷன் (வி.கீ.), அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா முகமது ஷமி.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles