ஐபிஎல் 2024.. மக்களவைத் தேர்தலால் ஏமாறும் தோனி.. இறுதிப்போட்டி சென்னையில் நடைபெற வாய்ப்பு.. விளக்கம் இதோ

ஐபிஎல் 2024 வருகிற 22ஆம் தேதி தொடங்க இருக்கிறது. முதல் கால அட்டவணையை மட்டுமே வெளியிட்டுள்ள பிசிசிஐ, மக்களவைத் தேர்தலால் தற்போது தோனியின் கனவு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

பிரம்மாண்டமாக நடைபெற உள்ள 17 வது ஐபிஎல் சீசன் சேப்பாக்கத்தில் முதல் போட்டி நடைபெற உள்ளது. இதில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி நடைபெறுவதற்கான பலத்த பாதுகாப்பு தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் இந்தியாவில் நடைபெறுவதால் முதல் 17 நாட்களுக்கான போட்டி அட்டவணையை மட்டுமே பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

- Advertisement -

தேர்தல் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஏனைய போட்டிகளுக்கான அட்டவணையை பின்னர் வெளியிடுவோம் என்று அறிவித்திருந்தது. தேர்தலுக்கான அட்டவணை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் நடைபெறும் ஊர்களில் போட்டியை வைத்தால் பாதுகாப்பு குறைவு ஏற்படும்.

- Advertisement -

இதனால்தான் இரண்டாம் கால அட்டவணையை பிசிசிஐ வெளியிடாமல் இருந்தது. எனவே எஞ்சிய போட்டிகளை துபாயில் நடத்தலாமா? என்று பிசிசிஐ அதிகாரிகள் துபாய் சென்று ஆலோசனை நடத்தினர். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவு என்றும், 2019ஆம் ஆண்டு தேர்தலில் எவ்வாறு போட்டியில் நடத்தப்பட்டதோ அதேபோல இம்முறையும் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

சென்னையில் தேர்தல் நடைபெற்றால் போட்டிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுமா? என்று கேள்வி எழுந்துள்ளது. அப்படி ஒருவேளை சென்னையிலிருந்து போட்டிகள் மாற்றப்பட்டால், தன்னுடைய கடைசி போட்டியை சென்னையில் முடித்துவிட்டு ரசிகர்கள் முன் விடைபெறுவேன் என்கிற தோனியின் ஆசை நடைபெறாமல் போய்விடுமோ? என்று ரசிகர்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். காரணம் இந்தியாவின் மகத்தான கேப்டனுக்கு சரியான பிரியா விடை அளிக்கப்படாததால் இந்த ஐபிஎல் சீசனிலாவது அது நடைபெற வேண்டும் என்று ரசிகர்கள் எண்ணுகின்றனர்.

- Advertisement -

இந்த குழப்பங்கள் நீடித்த நிலையில், தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதியுடன் சென்னையில் தேர்தல் முடிவு பெறுவதால், அதற்குப் பின்னர் போட்டிகள் நடத்துவதில் எந்த சிக்கலும் ஏற்படாது. 19ஆம் தேதிக்கு பிறகு வேறு நகரங்களில் வேண்டுமானால் தேர்தல் நடைபெறலாம். ஆனால் அது சென்னைக்கு எந்தவித பாதிப்பையும் உண்டாக்கப் போவதில்லை.

இதனால் தோனியின் பிரியாவிடை போட்டி நிச்சயமாக சென்னையில் நடத்துவதில் எந்த சிக்கலும் இருக்காது. இன்னும் சொல்லப்போனால் பல்வேறு நகரங்களில் தேர்தல் நடைபெறுவதால், இறுதிப்போட்டியை சென்னையில் நடத்தக் கூட வாய்ப்பு அதிகமாக உள்ளது என்றும் கூறுகின்றனர். இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்த பிறகே இதன் உண்மை நிலையை அறிய முடியும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles