ஐபிஎல் போட்டிக்கு சிக்கல்.. கடைசி நேரத்தில் கைவிரித்த காவல்துறை.. கேகேஆர் போட்டி எதிர்பார்த்தபடி நடைபெறுமா

சர்வதேச கிரிக்கெட்டின் திருவிழாவான ஐபிஎல் தொடர் வருகின்ற 22ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. உலகெங்கிலும் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பாக நடத்தப்படும் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியானது முதன்மையானதாக இருந்து வருகிறது. கடந்த 2008 ஆம் வருடம் முதல் நடைபெற்று வரும் இந்த தொடரின் 18 வது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது.

- Advertisement -

ஆரம்பத்தில் 8 அணிகளை கொண்டதாக தொடங்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டி 2022 ஆம் வருடம் முதல் 10 அணிகளை கொண்ட தொடராக தனது பரிணாமத்தை மாற்றியது. இந்த சீசனின் முதல் போட்டியில் கடந்த வருடம் ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கடந்த 17 வருடங்களாக கோப்பைக்காக காத்திருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத இருக்கின்றன. ஐபிஎல் திருவிழா நெருங்கி வருவதால் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் அதனை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

2025 ஆம் வருட ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி உட்பட 74 போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிகள் இந்தியாவில் உள்ள 13 சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் நடைபெற உள்ளன. ஐபிஎல் தொடரின் துவக்க போட்டி, இரண்டாவது தகுதி சுற்று போட்டி மற்றும் 2025 ஆம் வருட ஐபிஎல் இறுதிப்போட்டி போன்ற முக்கியமான போட்டிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் இந்தியாவின் பாரம்பரியமிக்க கிரிக்கெட் மைதானங்களான சேப்பாக்கம் மற்றும் வான்கடே போன்ற மைதானங்களிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

- Advertisement -

இந்நிலையில் வர இருக்கின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதும் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் என போட்டி அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அந்தப் போட்டி எதிர்பார்த்தபடி நடைபெறுமா.? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏப்ரல் ஆறாம் தேதி ராம் நவமி பண்டிகையை முன்னிட்டு கொல்கத்தா முழுவதும் 20,000 பக்தர்களைக் கொண்ட சிறப்பு பூஜைகள் நடைபெறும் என அம்மாநில பிஜேபி நிர்வாகி அறிவித்திருக்கிறார். இதன் காரணமாக நகர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிர படுத்த வேண்டியிருப்பதால் கேகேஆர் மற்றும் எல்எஸ்ஜி அணிகள் மோதும் போட்டிக்கு பாதுகாப்பு தர முடியாது என கொல்கத்தா மாநகர காவல் துறை தெரிவித்துள்ளதாக அம்மாநில கிரிக்கெட் சங்க தலைவர் சினேகசிஸ் கங்குலி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர், ஏப்ரல் ஆறாம் தேதி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறயிருக்கும் போட்டிகள் குறித்து காவல்துறையினரிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும் ராம் நவமி கொண்டாட்டங்கள் இருப்பதால் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற 2 கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியடைந்துள்ளது. காவல்துறையினரின் பாதுகாப்பு இல்லாமல் 65,000-திற்கும் மேற்பட்ட ரசிகர்களை கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியம். எனவே இந்தப் போட்டி குறித்து பிசிசிஐ நிர்வாகிகளிடம் தெரிவித்ததாக சினேகசிஸ் கங்குலி கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தப் போட்டி குறித்து இறுதி முடிவெடுப்பதற்கு கால அவகாசம் இருக்கிறது. கடந்த ஆண்டும் ராமநவமி பண்டிகையை முன்னிட்டு கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மாற்றியமைக்கப்பட்டது. அதேபோன்று இந்த வருடமும் கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகள் மோதும் போட்டியும் மாற்றி அமைக்கப்படலாம் என பிசிசிஐ நிர்வாகத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் 2025 ஆம் வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கயிருக்கும் நிலையில் பிரம்மாண்டமான துவக்க விழாவை நடத்த ஐபிஎல் நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்கிறது. 35 நிமிடங்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் பிரபல பாடகி ஸ்ரேயா கோசல் மற்றும் பாலிவுட் நடிகை திஷா பத்தாணி ஆகியோர் நேரலையில் ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறார்கள.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles