டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி தனது முதல் பயிற்சி போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தியுள்ளது.
நாளை அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியை இந்திய அணி விளையாட உள்ள நிலையில், மைதான சூழல் மற்றும் ஆடுகளத்தின் தன்மை ஆகியவற்றிற்கு ஏற்ப இந்திய பிளேயிங் லெவன் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது.
போட்டி நடைபெற உள்ள நியூயார்க் மைதானம், கடந்த ஆண்டு முதல்தான் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதிதாக கட்டப்பட்டது. மேலும் ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் மூலம் இந்த ஆடுகளம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த ஆடுகளம் முதலில் பவுன்ஸ்க்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவை போன்று ட்ராப் இன் பிட்ச் ஆடுகளம் பயன்படுத்தப்படுவதால் இது வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு தகுந்தவாறு நேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையே டி20 போட்டியில் தென்னாபிரிக்க அணி சிறப்பாக 5 முழுமையான பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது. ஆடுகளம் முழுக்க பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த காரணத்தால், தென்னாப்பிரிக்க அணி பகுதி நேர பங்கு வீச்சாளர்களை பயன்படுத்தவில்லை. இது தென் ஆப்பிரிக்கா அணிக்கு நன்றாகவே கை கொடுத்தது.
இதன் மூலம் நாளை நடைபெற உள்ள இந்தியா, அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி ஹர்திக் பாண்டியா இல்லாமல் ஐந்து முழுமையான பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவது இந்திய அணிக்கு சாதகமாக அமையும். குறிப்பாக இந்திய அணியில் முகமது சிராஜ் உடன் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் களமிறங்குவது நல்லது.
மேலும் சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவுடன் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக அக்சார் பட்டேல் களம் இறங்க வேண்டும். அக்சார் பட்டேல் பேட்டிங்கில் ஜடேஜாவை விட சிறப்பாக விளையாடுவார். மேலும் பவர் பிளேவிலும் பந்து வீசும் திறமையும் இவருக்கு இருக்கிறது. இதனால் இவருக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்திய அணி எடுப்பது நல்லது. எனவே ஹர்திக் பாண்டியாவோடு சேர்த்து ஆறு பேட்ஸ்மேன்கள் அக்சார் பட்டேலை வைத்து ஐந்து முழுமையான பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினால் அது ஆடுகளத்தன்மைக்கு இந்திய அணியின் தேர்வு சிறப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி களம் இறங்குவது மிகவும் முக்கியம்.
இதையும் படிங்க:வாழ்வில் நிறைய கஷ்டங்களை பார்த்துள்ளேன்.. உலகக்கோப்பை அணியில் இடம் என்பது சாதாரண விஷயம் அல்ல.. சஞ்சு சாம்சன் பேட்டி
அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்:
ரோகித் சர்மா( கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், பும்ரா, சிராஜ் மற்றும் அர்ஸ்தீப் சிங்.

