வாழ்வில் நிறைய கஷ்டங்களை பார்த்துள்ளேன்.. உலகக்கோப்பை அணியில் இடம் என்பது சாதாரண விஷயம் அல்ல.. சஞ்சு சாம்சன் பேட்டி

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணித்தேர்வில் அஜித் அகர்க்கர் தலைமையிலான தேர்வுக்குழு இரண்டு விக்கெட் கீப்பர்களை தேர்வு செய்யும் பொருட்டு ரிஷப் பன்ட்டோடு சேர்த்து அதில் சஞ்சு சாம்சனையும் தேர்வு செய்துள்ளது.

- Advertisement -

தான் டி20 உலக கோப்பைக்கு தேர்வானது பெரிய விஷயம் என்றும் அணிக்கு என்ன தேவையோ அதன் காம்பினேஷன் வைத்து தான் அணித்தேர்வு இருக்கும் என்று சாம்சன் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சிறு வயது முதலே ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் சஞ்சு சாம்சன் இந்திய அணிக்குள் அவ்வப்போது வருவதும் போவதுமாய் இருந்தார். ஆனால் கடந்த சில வருடங்களாக இந்திய அணியும் இவருக்கான வாய்ப்பை அள்ளிக் கொடுத்தது. மேலும் இந்த ஐபிஎல் தொடரிலும் சஞ்சு சாம்சன் திறமையாக விளையாடி தன்னை நிரூபித்தார்.

- Advertisement -

இவரது தலைமையில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ப்ளே ஆப் சுற்று வரை முன்னேறியது. பேட்டிங்கில் கலக்கிய சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 86 ரன்கள் குவித்து 48 ஆவரேஜ்ல் 153 ஸ்ட்ரைக் ரைட்டில் 531 ரன்கள் குவித்துள்ளார். இந்திய அணி டி20 உலக கோப்பை அணியை தேர்வு செய்யும்போது ரிசப் பண்ட் முதன்மையான விக்கெட் கீப்பராக இருந்தார். அவருக்கு பேக்கப் விக்கெட் கீப்பராக கே.எல் ராகுல் அல்லது சாம்சன் இருவரில் யாரை தேர்வு செய்யலாம் என்ற விவாதம் நீடித்தது.

அப்போது சஞ்சு சாம்சன் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்டமிழக்காமல் 83 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற செய்தார். அந்த ஒரு இன்னிங்ஸ் தான் இவரை டி20 உலக கோப்பை அணிக்கு தேர்வு செய்தது என்றும் சொல்லலாம். இந்த நிலையில் தான் டி20 அணிக்கு தேர்வு செய்யப்பட்டதை அடுத்து சஞ்சு சாம்சன் கூறும் பொழுது
“இந்த உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு தயாரான அனுபவம் வாய்ந்த சஞ்சு சாம்சன் வருவார். ஏனெனில் இதற்கு முன்னர் அவர் சந்தித்த தோல்விகள், கஷ்டங்கள் ஏராளம்.

- Advertisement -

வெற்றி மற்றும் தோல்விகள் ஆகிய இரண்டும் வாழ்க்கையை சரிசமமாக கற்றுக் கொடுத்துள்ளது. நான் இந்திய அணிக்கு தேர்வானது பெரிய விஷயம். இது என் வாழ்க்கையில் நடந்த மிகச்சிறந்த விஷயமாகும். உலகக்கோப்பை தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது செலக்சன் குறித்த எண்ணம் என் மனதுக்குள் இருந்தது. இருப்பினும் இந்த ஐபிஎல் சீசன் நல்ல விதமாய் அமைவதை உணர்ந்தேன்.

இதையும் படிங்க:உலகக் கோப்பையில் விராட் கோலி இதை பண்ணியே ஆகணும்.. இல்லனா அவர டீம்ல எடுக்காதீங்க.. மேத்யூ ஹைடன் அதிரடி

டி20அணிக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் இருந்தது. ஆனால் அதை கடினம் என்பதை உணர்ந்தேன். ஒரு செலக்சன் என்பது அணிக்கு என்ன தேவை மற்றும் செலக்சன் கமிட்டி என்ன மாதிரியான காம்பினேஷன் எதிர்பார்க்கிறார்கள் என்பதை பொறுத்துதான் அமையும். ஆனால் நான் நம்பிக்கையோடு இருந்தேன். கிரிக்கெட்டும் அதை எனக்கு தற்போது நன்றாக கொடுத்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles