ஐசிசி டி20 ரேங்கிங்.. மாஸ் காட்டிய ஹர்திக் பாண்டியா.. நம்பர் 1 இடத்திற்கு முன்னேற்றம்.. சில இந்திய வீரர்களும் உயர்வு

சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய அணி வென்ற கையோடு ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய அணி வீரர்களும் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

- Advertisement -

இதில் இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா டி20 ஆல் ரவுண்டர்களின் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறினார். மேலும் சில இந்திய வீரர்களும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

- Advertisement -

கடைசியாக மகேந்திர சிங் தோனி தலைமையில் ஐசிசி தொடரை வென்ற இந்திய அணி, அதன் பிறகு தற்போது ரோகித் சர்மா தலைமையில் டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதற்கு விராட் கோலி, ரோஹித் சர்மா,பும்ரா என முன்னணி வீரர்கள் காரணமாக இருந்தாலும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் பங்களிப்பு இந்திய அணிக்கு மறுக்க முடியாத ஒன்றாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இந்த டி20 உலக கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா 144 ரன்கள் பதினோரு விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார். ஒரு போட்டியில் பந்து வீச்சில் சொதப்பினால் பேட்டிங்கிலும், பேட்டிங்கில் தடுமாறினால் பந்து வீச்சிலும் என ஒவ்வொரு போட்டியிலும் ஏதோ ஒரு பங்களிப்பை தனது அணிக்காக கொடுத்துக் கொண்டே இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்டத்தை தென்னாப்பிரிக்காவின் பக்கம் திருப்பிக் கொண்டிருந்த கிளாசனை தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது மட்டுமல்லாமல் கடைசி ஓவரில் டேவிட் மில்லரையும் அவுட் ஆக்கினார். இந்த இரண்டு வீரர்களையும் வீழ்த்திய ஒரே காரணத்தால்தான் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல முடிந்தது.

- Advertisement -

இதனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்போது வெளியிட்டுள்ள ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில், சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா 222 புள்ளிகளுடன் ஆல் ரவுண்டர் தர வரிசையில் தற்போது முதல் இடத்தை பிடித்திருக்கிறார். டி20யை பொருத்தவரை ஆல்ரவுண்டர் பட்டியலில் ஒரு இந்திய வீரர் முதல் இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் வேண்டுமானால் கம்பீர், கோலி, சூரியகுமார் யாதவ் ஆகியோர் இருந்துள்ளனர்.

இதையும் படிங்க:விராட் கோலி கோஹினூர் வைரம் என்றால்.. இவர் அவரை விட சிறப்பு மிக்கவர்- தினேஷ் கார்த்திக் பாராட்டு

மேலும் பந்துவீச்சிலும் பும்ரா, பிஸ்னாய் ஆகியோர் பந்துவீச்சில் முதலிடத்தை பெற்று இருக்கிறார்கள். ஆனால் ஆல்ரவுண்டர் பட்டியலில் முதலிடத்தை பெறுவது இதுவே முதல்முறை. இதேபோல பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் சிறப்பாக செயல்பட்ட அக்சார் பட்டேல் ஏழாவது இடத்திலும், குல்தீப் யாதவ் ஒன்பதாவது இடத்திலும், பும்ரா பன்னிரண்டாவது இடத்திலும், அர்ஸ்தீப் சிங் 14வது இடத்திலும் இருக்கின்றனர். பேட்டிங்கில் சூரியகுமார் யாதவ் இரண்டாவது இடத்திலும், ஜெய்ஸ்வால் ஏழாவது இடத்திலும் இருக்கின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles