என்ன பிட்ச் இது.. ரஞ்சி டிராபி விளையாடுற மாதிரி இருக்கு.. சிவம் தூபே ஆதங்கம்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக தற்போது மூன்று வெற்றிகளை பெற்று நாளை கனடா அணிக்கு எதிராக விளையாட உள்ளது.

- Advertisement -

அமெரிக்காவின் நியூயார்க் மைதானத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற மூன்று போட்டிகள் நடைபெற்ற நிலையில் நான்காவது மற்றும் கடைசி லீக் போட்டி இந்திய அணிக்கு ப்ளோரிடாவில் நடைபெறுகிறது. இந்த நிலையில் அமெரிக்க மைதானம் தனக்கு ரஞ்சி டிராபியில் விளையாடுவதை போன்ற உணர்வை கொடுத்ததாக இந்திய வீரர் சிவம் தூபே கூறி இருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மிடில் ஆர்டரில் களமிறங்கி சுழற் பந்து வீச்சை திறம்பட சமாளிக்கிறார் என்பதனால் இந்திய அணியிலும் திறமையாக விளையாடுவார் என்று டி20 உலக கோப்பையில் சிவம் துபேவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்புகளை அமெரிக்க அணிக்கு எதிராக விளையாடுவதற்கு இரண்டு போட்டிகளில் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

- Advertisement -

மேலும் கடந்த இரண்டு போட்டிகளில் குறைந்த ரன்களிலேயே வெளியேறியதால், சிவம் துபேவிற்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்த சூழ்நிலையில் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 35 பந்துகளில் 31 ரன்கள் சூழ்நிலைக்கு தகுந்தவாறு குறித்து சரியான நேரத்தில் பார்முக்கு வந்திருக்கிறார். மேலும் நியூயார்க் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சிரமமாக இருந்ததாகவும் கூறியிருக்கிறார்.

இது குறித்து சிவம் தூபே கூறும்பொழுது
” நியூயார்க்கில் விளையாடும்போது நான் ரஞ்சி டிராபியில் விளையாடுவதை போல உணர்ந்தேன். வெள்ளைப் பந்து கிரிக்கெட் விளையாடுவதை நான் சுத்தமாக உணரவில்லை. இந்த ஆடுகளத்தில் சிக்ஸ் அடிக்க வேண்டுமென்றால் நாம் நமது சிறந்த ஷாட் மூலமே அடிக்க முடியும் என்பதை உணர்ந்தேன். அமெரிக்க அணிக்கு எதிராக விளையாடும் பொழுது எனது பலமான திசைக்கு வீசப்படும் பந்துக்காக காத்திருந்தேன்.

- Advertisement -

மற்ற ஆடுகளம் போல் இதில் எளிதாக ரன்கள் குவிக்க முடியாது. இங்கு செட்டில் ஆக கண்டிப்பாக நேரம் எடுக்கும். நிச்சயமாக சிஎஸ்கே மற்றும் இந்திய அணிக்காக 6 அடிப்பதை மிஸ் செய்கிறேன். இந்த கடினமான சூழல் சர்வதேச போட்டியில் மட்டுமல்லாமல் வலைப் பயிற்சியிலும் அடிப்பதற்கு சிரமமாக இருந்தது. மேலும் இந்த மைதானத்தில் பந்து வீசவும் விரும்பினேன்.

இதையும் படிங்க:9 ரன் 4 விக்கெட்.. ரோஹித் சர்மா என் மீது வைத்த நம்பிக்கைதான் அனைத்திற்கும் காரணம்.. கூறுகிறார் அர்ஸ்தீப் சிங்

ஆனால் கடந்த சில போட்டிகளில் எனது பந்துவீச்சில் ரன்கள் அதிகமாக சென்றதால், எனக்கு பந்து வீசுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை”என்று சிவம் தூபே கூறி இருக்கிறார். அமெரிக்காவில் இந்திய அணிக்கு போட்டிகள் முடிவடைந்துள்ளதால் தற்போது சிவம் துபே கடந்த போட்டியை விட இனி வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles