எனக்குத் தெரியும் தோனிக்கு இது பிடிக்காதுன்னு.. ஆனா எனக்கு இது ரொம்ப பிடிக்கும்- ஜடேஜாவின் வாழ்த்து

இந்திய கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த மகேந்திர சிங் தோனி தனது 43 வது பிறந்த நாளை இன்று கொண்டாடி இருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியில் அவரோடு விளையாடிய சக வீரரான ரவீந்திர ஜடேஜா அவருடன் இருக்கும் அவருக்கு பிடிக்காத புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியில் மகேந்திர சிங் டோனி கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு அணியில் திறமையான இளம் வீரர்களுக்கு நிறைய வாய்ப்பு கிடைத்தது. அப்படி சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, விராட் கோலி வரிசையில் உள்ளே வந்தவர்தான் ரவீந்திர ஜடேஜா. பேட்டிங் மற்றும் பந்து வீச்சு மட்டுமில்லாமல் பீல்டிங்கிலும் அற்புதமாக செயல்பட்டு இந்திய அணிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கி இருக்கிறார்.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனியோடு விளையாடி வருகிறார். இளம் வீரரான அறிமுகமான ஜடேஜா சமீபத்தில் இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்றதுடன் டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்காக அறிவித்து இருக்கிறார். இனிவரும் காலங்களில் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் மட்டும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஐபிஎல் தொடரில் மட்டும் சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த சூழ்நிலையில் மகேந்திர சிங் டோனி இன்று தனது 43 வது பிறந்த நாளை கொண்டாடி வரும் வேளையில், ரவீந்திர ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகேந்திர சிங் டோனியோடு ரவீந்திர ஜடேஜா இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு அதில் தோனி தூங்குவது போன்று காட்சி அளிக்க அந்த புகைப்படத்தில் “இந்தப் புகைப்படத்தை மகேந்திர சிங் தோனி விரும்பும் மாட்டார்,ஆனால் இந்த புகைப்படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்” என கூறியதோடு அவருக்கு தனது பிறந்த நாள் வாழ்த்தையும் தெரிவித்து பதிவிட்டு இருக்கிறார்.

- Advertisement -

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது. ஜடேஜா மட்டுமில்லாமல் தற்போது இந்திய அணி வீரர்களும், முன்னாள் வீரர்களும், இந்திய ரசிகர்களும் தங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தோனிக்கு தெரிவித்து வருகின்றனர். தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் தனது சமூக வலைதளத்தில் அவரது ஸ்பெஷல் வீடியோவையும் பதிவேற்றி இருக்கிறது.

இதையும் படிங்க:நாங்க இப்படி பண்ண கூடாது.. ரோஹித் கோலி எங்கள நம்பி தான் விட்டுட்டு போயிருக்காங்க- ரவி பிஷ்னாய் பேட்டி

மகேந்திர சிங் தோனி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் நிலையில், அடுத்த ஆண்டும் சென்னை அணிக்காக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தோனிக்கு 43 வயதாகி வரும் நிலையில்,இதுவே அவருக்கு கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles