நாங்க இப்படி பண்ண கூடாது.. ரோஹித் கோலி எங்கள நம்பி தான் விட்டுட்டு போயிருக்காங்க- ரவி பிஷ்னாய் பேட்டி

இந்திய இளம் அணியினர் நேற்று நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியின் இந்த மோசமான தோல்விக்கு காரணம் அனுபவ வீரர்கள் இல்லாததே என்று இந்திய அணி வீரர் ரவி பிஷ்னாய் கூறியிருக்கிறார்.

- Advertisement -

நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி இந்திய அணி வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரவி பிஸ்னாய் நான்கு முக்கிய விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. கத்துக்குட்டி அணியான ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று அனைவரும் நினைத்தனர்.

- Advertisement -

ஆனால் சீனியர் வீரர்கள் இல்லாமல் ஐபிஎல் விளையாடிய வீரர்களைக் கொண்டு களமிறங்கிய முதல் போட்டியில் இந்திய அணி 102 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதில் கேப்டன் கில் மட்டும் ஒரு முனையில் போராட மறு முனையில் ருத்ராஜ், பராக், அபிஷேக் ஷர்மா என்று ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய அனைத்து வீரர்களும் இந்த போட்டியில் சொதப்பினார்கள். இதனால் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தற்போது தோல்வி அடைந்திருக்கிறது.

இதுகுறித்து இந்திய அணி வீரர் ரவி பிஸ்னாய் தோல்வி குறித்து கூறும் பொழுது “இந்திய அணியில் மூத்த வீரர்கள் இல்லாமல் இந்தத் தொடரில் விளையாட உள்ளோம். அவர்கள் கொடுத்த இந்திய அணியை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது எங்கள் பொறுப்பு. இது புது வீரர்களுக்கான நேரம். எனவே நமது தேசியக் கொடியை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டியது நமது கடமை. கேப்டன் கில் சிறப்பாகவே பந்து வீச்சு மாற்றங்களை செய்தார்.

- Advertisement -

அவரது கேப்டன்ஷியில் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. ஆனால் எங்களது பேட்டிங் சரியாக அமையவில்லை. எனவே இந்த போட்டியில் இருந்து நாங்கள் முன்னெடுத்து இரண்டாவது போட்டியில் கம்பேக் கொடுக்க முயற்சிப்போம். இதனால் இரண்டாவது போட்டியில் நாங்கள் புத்துணர்ச்சியுடன் செயல்பட வேண்டியது அவசியம். முதல் போட்டியில் நாங்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது தோல்விக்கு காரணமாக அமைந்தது.

இதையும் படிங்க:இவரை நம்புனது எங்க தப்புதான்.. இப்படி ஒரு பிளான் பண்ண போயி கடைசியில் மாட்டிக்கட்டோம்- கில் பேட்டி

இந்த போட்டியில் 20 முதல் 30 ரன்கள் வரை குவித்திருந்தால் பெரிய வித்தியாசம் ஏற்பட்டிருக்கும். எங்களிடம் நல்ல பாட்னர்ஷிப் அமையாதது எங்கள் தோல்விக்கு காரணம். ஜிம்பாப்வே அணி பேட்டிங் பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் அசத்தியது. எனவே நாங்கள் இந்த போட்டியின் மூலம் நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டு அடுத்த போட்டியில் முன்னேறுவோம்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles