இவரை நம்புனது எங்க தப்புதான்.. இப்படி ஒரு பிளான் பண்ண போயி கடைசியில் மாட்டிக்கட்டோம்- கில் பேட்டி

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமான தோல்வியை தழுவி இருக்கிறது.

- Advertisement -

இந்த தோல்விக்கான காரணம் குறித்து இந்திய அணியின் கேப்டன் கில் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவரும் இந்திய அணி நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஜிம்பாப்வே பேட்ஸ்மேன் மதாந்தி 29 ரன்கள் குவித்தார். இந்தியா அணித் தரப்பில் பிஸ்னாய் நான்கு முக்கிய விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு விக்கெட்டுகள் விரைவிலேயே வீழ்ந்தாலும் கேப்டன் கில் ஒரு முனையில் போராடி அதிகபட்சமாக 31 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு இறுதிக் கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் போராடினாலும் அவரது போராட்டம் இந்திய அணி வெற்றி பெற உதவவில்லை. இறுதியாக இந்திய அணி 19.5 ஓவர்களில் 102 ரன்கள் குவித்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கடைசி வரை போராடிய வாஷிங்டன் சுந்தர் 34 பந்துகளில் 27 ரன்கள் குவித்தார்.

இந்த தோல்விக்கான காரணம் குறித்து அணியின் கேப்டன் கில் கூறும் பொழுது “எங்களது பந்து வீச்சு அபாரமாக இருந்தது. ஆனால் பேட்டிங்கில் நாங்கள் எதிர்பார்த்த விதத்தில் செயல்படவில்லை. தொடக்கத்திலேயே நாங்கள் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது எங்கள் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. நாங்கள் பேட்டிங்கில் ரசித்து விளையாட விரும்பினோம். ஆனால் நான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று அணியை வெற்றி பெற வைத்திருக்க வேண்டும்.

- Advertisement -

நான் ஆட்டமிழந்த விதம் எனக்கு பிடிக்கவில்லை. மேலும் நான் ஆட்டமிழந்து வெளியேறினாலும் வாஷிங்டன் சுந்தர் இறுதிக்கட்டத்தில் போராடினார். பத்தாவது பேட்ஸ்மேனை நம்பி ஒரு அணி எப்போது இருக்கிறதோ அப்போதே அந்த அணி தோற்றுவிட்டது. எனவே இனிவரும் போட்டிகளில் கவனம் செலுத்துவோம்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:10 ரன்னை தாண்டாத 8 பேர்.. தோனிக்கு அடுத்ததாக சாதனை படைத்த கில்.. ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்திய தோல்வி

இன்று இரண்டாவது போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று தங்களது வெற்றி கணக்கை தொடங்க முயற்சிக்கும். அணியில் இளம் வலுவான வீரர்கள் இருந்தாலும் முதல் போட்டியில் அவ்வளவாக சோபிக்கவில்லை. எனவே இந்த போட்டியில் அவர்கள் மீண்டு வர முயற்சிப்பார்கள். இந்திய அணி வெற்றி பெற கடைசி மூன்று பந்துகளில் 14 ரன்கள் தேவைப்பட்டபோது களத்தில் இருந்த வாஷிங்டன் சுந்தர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று ரசிகர்கள் தற்போது விமர்சித்து வருகின்றனர்

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles