10 ரன்னை தாண்டாத 8 பேர்.. தோனிக்கு அடுத்ததாக சாதனை படைத்த கில்.. ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்திய தோல்வி

கில் தலைமையிலான இந்திய அணி தற்போது ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டியில் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று உள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நடைபெற்ற நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா மற்றும் ரியான் பராக் ஆகியோர் அறிமுகமாகினர். இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் மட்டுமே குவித்தது. அந்த அணியில் மதிவேர் 22 பந்துகளில் 21 ரன்களும், பிரைன் பென்னட் 15 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 22 ரன்களும் மேயர்ஸ் 22 பந்துகளில் 23 ரன்களும் குவித்தனர்.

- Advertisement -

இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஸ்னாய் நான்கு ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதில் இரண்டு ஓவர்கள் மெய்டனும் அடங்கும்.

இதை அடுத்து இந்திய அணி வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கியது. தனது முதல் போட்டியில் அறிமுகமான அபிஷேக் சர்மா நான்கு பந்துகள் மட்டுமே பிடித்த நிலையில் பென்னட் பந்து வீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறினார். கேப்டன் கில் ஒரு முனையில் போராட, அவரைத் தொடர்ந்து தனது முதல் போட்டியில் அறிமுகமாக ரியான் பராக் இரண்டு ரன்களில் வெளியேறினார்.

- Advertisement -

ஜுரேல் ஆறு ரன்களில் நடையை கட்டினார். அதற்குப் பின்னர் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் நிலைத்து நிற்க அதற்குள் கேப்டன் கில் 31 ரன்களில் எதிர்பாராத விதமாக அவுட் ஆகி வெளியேறினார். பிறகு வந்த வீரர்களில் ஆவேஷ் கான் மட்டுமே 16 ரன்கள் குவித்தார். பின்னர் இறுதி வரை போராடிய வாஷிங்டன் சுந்தர் 34 பந்துகள் எதிர்கொண்ட நிலையில் 27 ரன்கள் குவித்து வெளியேற இந்திய அணி 19.5 ஓவர்களில் 102 ரன்கள் மட்டுமே குவித்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதையும் படிங்க:உலகின் 8-வது அதிசயமாக இவரை அறிவிக்கலாம்.. 100 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கிடைப்பார்- விராட் கோலி பாராட்டு

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது ஜிம்பாப்வே அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், அடுத்து வரும் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற முயற்சிக்கும். இந்த சூழ்நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த இரண்டாவது இந்திய கேப்டன் என்ற சோகமான சாதனையையும் கில் படைத்திருக்கிறார். இதற்கு முன்பு ஜிம்பாப்வே அணி எம் எஸ் தோனி தலைமையில் இந்திய அணியை வென்றது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles