இந்திய அணிக்குத் திரும்பும் முன்.. நான் இந்த ஒரு விஷயத்தை செய்யணும் – முகமது சமி பேட்டி

இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த முகமது சமி கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது இந்திய அணியில் இருந்து விலகி ஓய்வெடுத்து வரும் நிலையில் அவர் இந்திய அணிக்கு எப்போது திரும்புவார் என்ற கேள்வி கிரிக்கெட் வட்டாரத்தில் எழுந்து வருகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் அதற்கான விளக்கத்தை சமியே அறிவித்து தான் இந்திய அணிக்கு எப்போது திரும்ப வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி கடைசியாக 2023ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றார். ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வந்த சமிக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. ஆனால் அதனை பொருட்படுத்தாது இந்திய அணிக்காக விளையாடி வந்த நிலையில் உலகக் கோப்பை தொடர் முடிந்த பிறகு காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வெடுத்து வந்தார்.

- Advertisement -

அவரது காயம் தீவிரமாக இருந்த நிலையில், விரைவாக அவரால் இந்திய அணிக்கு திரும்ப முடியவில்லை. சுமார் ஒரு வருட காலம் ஓய்வெடுத்து வந்த நிலையில் தற்போது சமி காயத்தில் இருந்து முழுவதும் குணமாகி விட்டார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்த சூழ்நிலையில் அவர் இந்திய அணிக்கு எப்போது திரும்புவார் என்ற கருத்துக்கள் வேகமாக பரவி வரும் நிலையில் தான் இந்திய அணிக்கு விளையாடுவதற்கு முன்பாக பெங்கால் அணிக்காக விளையாட வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

இது குறித்து சமி விரிவாக கூறும்போது “நான் இந்திய அணிக்காக விளையாடுவதற்கு மிகத் தீவிரமாக தயாராகி வருகிறேன். அதுவே என்னுடைய மிகப்பெரிய இலக்கு. ஆனால் அதற்கு முன்பாக நான் பெங்கால் அணிக்காக விளையாடுவதை நீங்கள் பார்ப்பீர்கள். குறைந்தது இரண்டு அல்லது மூன்று போட்டிகள் ஆவது பெங்கால் அணிக்காக விளையாடிவிட்டு அதற்குப் பிறகுதான் இந்திய அணிக்குச் செல்ல வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க:அடிச்சி சொல்றேன்.. கோலி ஸ்மித் இல்லை.. சச்சின் சாதனையை முறியடிக்க போறது இவர்தான் – ரிக்கி பாண்டிங் நம்பிக்கை

இவரது உடல்நிலை குறித்து இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் கூறும் போது “வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடப் போகும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தான் சமிக்கு இலக்காக வைத்திருந்தோம். ஆனால் அவரது உடல்நிலை தற்போது எந்த அளவிற்கு தேறி இருக்கிறது என்று தெரியவில்லை. எனவே அவரது உடல்நிலை குறித்து தேசிய கிரிக்கெட் அகாடமி தான் தெரிவிக்க வேண்டும்” என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles