அடிச்சி சொல்றேன்.. கோலி ஸ்மித் இல்லை.. சச்சின் சாதனையை முறியடிக்க போறது இவர்தான் – ரிக்கி பாண்டிங் நம்பிக்கை

உலக கிரிக்கெட்டின் சாதனை நாயகனாக திகழ்ந்தவர் சச்சின் டெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 சதங்கள் எடுத்த ஒரே வீரர் இவர்தான். மேலும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் சச்சின் டெண்டுல்கர் படைத்திருக்கிறார். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் உலகில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இங்கிலாந்து அணியின் வீரர் ஜோ ரூட் முறியடிப்பார் என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

உலக டெஸ்ட் வரலாற்றில் 10,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை இந்தியாவின் லிட்டில் மாஸ்டர் சுனில் கவாஸ்கர் படைத்திருந்தார். 122 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கவாஸ்கர் 10,122 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 34 சதங்கள் எடுத்து அதிக சதங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்திருந்தார். இவரைத் தொடர்ந்து இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்தார். 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் 51 சதங்களுடன் 15,921 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்று 11 வருடங்கள் ஆகிய நிலையிலும் அவரது சாதனைக்கு அருகில் கூட யாராலும் வர முடியவில்லை. சச்சின் டெண்டுல்கரை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 168 டெஸ்ட் போட்டிகளில் 13,378 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார் என ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாக ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை 143 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் ஜோ ரூட் 32 சதங்களுடன் 12.027 ரன்கள் குவித்திருக்கிறார். இதேபோன்று தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடினால் ஜோ ரூட், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க முடியும் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஐசிசி ரிவ்யூ நிகழ்ச்சியில் பேசிய ரிக்கி  பாண்டிங், ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர் ” ஜோ ரூட்டுக்கு தற்போது 33 வயது தான் ஆகிறது. அவரால் இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியும். எனினும் இங்கிலாந்து அணி எவ்வளவு டெஸ்ட் போட்டிகள் விளையாடுகிறது என்பதை பொறுத்து தான் அவர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பாரா.? என்பது தெரியவரும். இங்கிலாந்து அணி ஒரு வருடத்திற்கு 10 முதல் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஜோ ரூட் ஒரு வருடத்திற்கு 800 முதல் 1,000 ரன்களை எடுத்தால் 37 வயதில் அவரால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க முடியும் என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

அவருக்கு கிரிக்கெட்டில் இன்னும் 4 முதல் 5 வருடங்கள் இருக்கிறது. தற்போது விளையாடுவது போன்ற வேட்கையுடன் தொடர்ந்து விளையாடினால் நிச்சயமாக ஜோ ரூட் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார் என தெரிவித்தார் ரிக்கி பாண்டிங். மேலும் தொடர்ந்து பேசுகையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் 40 அல்லது 50 ரன்களில் ஜோ ரூட் ஆட்டம் இழந்தார். ஆனால் தற்போது 50 ரன்கள் கடந்தால் அதனை மிகப்பெரிய செஞ்சுரி ஆக ஜோ ரூட் மாற்றுகிறார். இது அவரது கிரிக்கெட் கேரியரில் முக்கிய திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. எனவே அவர் இதே போன்று சிறப்பாக ஆடும் பட்சத்தில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles