மலையைக் கடக்க என் ஒருவனால் முடியாது.. உங்கள் ஆக்சிஜன் தேவை.. கோப்பையை வெல்லும் முன் ரோஹித் கூறியதாக சூர்யா பேட்டி

மகேந்திர சிங் தோனி தலைமையில் கடைசியாக 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி அதற்குப் பிறகு 11 வருடங்கள் கழித்து டி20 உலக கோப்பையை வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இந்திய அணி திளைத்துக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இறுதி போட்டிக்கு முன்பாக ரோஹித் சர்மா வீரர்களிடம் கூறிய உணர்ச்சிமிகு வார்த்தைகளைத் தற்போது சூரியகுமார் யாதவ் கூறி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தால் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக, 2021ம் ஆண்டு விராட் கோலி அனைத்து வகையான கேப்டன்ஷியிலும் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதை இந்திய கிரிக்கெட் நிர்வாகமே எதிர்பாராத வகையில், அவருக்கு இணையான அடுத்த சீனியர் வீரர் ரோஹித் சர்மாவை மூன்று வடிவ தொடருக்கும் கேப்டனாக அறிவித்தது. ஏனெனில் இந்திய அணிக்கு சில தொடர்கள் கேப்டனாக விளையாடியிருந்தாலும், ரோஹித் சர்மாவின் திறமை ஐபிஎல் தொடரில் தெள்ளத் தெளிவாக தெரிந்தது.

- Advertisement -

அவர் அதற்கு முன்னர் ஐந்து முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார். இவரின் திறமையை அறிந்த இந்திய அணி நிர்வாகம் விராட் கோலிக்கு பிறகு ரோகித் சர்மாவை கேப்டனாக அறிவிக்க அவரும் தனது திறமையால் 2023ம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பை இறுதி போட்டி வரையிலும், அதே ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இறுதிப் போட்டி வரை வந்து தோல்வியை தழுவியது.

இந்த சூழ்நிலையிலும் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னதாக ரோகித் சர்மா வீரர்களிடம் இந்த மலையை கடக்க என் ஒரு நாள் மட்டும் முடியாது, உங்கள் அனைவரின் ஆக்ஸிஜனும் எனக்கு தேவை. நாம் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் இந்த போட்டியில் வருத்தப்பட வேண்டிய சூழ்நிலை இருக்காது என்று கூறியதாக சூரியகுமார் யாதவ் கூறினார். இதுகுறித்து சூரியகுமார் யாதவ் விரிவாக கூறும் பொழுது “ரோகித் சர்மா வீரர்களிடம் நாம் நமது கடின உழைப்பால் இறுதிப் போட்டி வரை வந்துள்ளோம்.

- Advertisement -

இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற என் ஒரு நாள் மட்டும் முடியாது. மலையைக் கடக்க உங்கள் அனைவரின் ஆக்சிஜன் எனக்குத் தேவை. இதனால் உங்கள் கை, கால், உடல், மனது என அனைத்தையும் ஒன்றாக இணைத்து போட்டியில் மட்டும் செயல்படுத்துங்கள். இறுதிப் போட்டியில் நாம் வெற்றி பெற்றால் இன்று இரவு நாம் வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று ரோஹித் சர்மா சொன்னதும் அவர் கூறிய வார்த்தைகள் எங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:பிளேயர்ஸ் எல்லாருமே சுயநலமா இருந்தாங்க.. அதனாலதான் உலக கோப்பை ஜெயிக்கல.. ஆனால் ரோஹித் கதை வேற- நவ்ஜோத் சிங் பேட்டி

எந்த வீரரையும் விட்டுக் கொடுக்காத ரோஹித் சர்மா, அவருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று வீரர்கள் நினைப்பார்கள். அப்படி அவர் ஆதரவு தரும்போது தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் கொடுக்கும் இந்த வீரருக்கு நாம் எதையாவது செய்ய வேண்டும் என்று இந்திய வீரர்கள் அனைவரும் நினைப்பார்கள்” என்ற சூரியகுமார் யாதவ் கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles