இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையில் ஒரு அணியாக நன்றாக செயல்பட்டு வருகிறது. அதனால் தொடர்ச்சியாக இந்திய அணி மூன்று போட்டிகளை வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இந்திய அணி குறித்தும், ரோஹித் சர்மா குறித்தும் மேலும் தனது கிரிக்கெட் செயல்பாடுகள் குறித்தும் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியான முடிவுகளை எடுத்து மூன்றாம் வரிசையில் களமிறங்கி விளையாடிய விராட் கோலியை தொடக்க ஆட்டக்காரர் ஆகவும், மிடில் வரிசையில் களமிறங்கி விளையாடி வந்த ரிஷப் பண்டை மூன்றாம் வரிசையிலும் விளையாட வைத்தார்.
விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக சொதப்பினாலும் அடுத்து வரும் ஆட்டங்களில் தன்னுடைய பார்மை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் ரிஷப் பண்ட் தற்போது மூன்றாம் வரிசையில் களமிறங்கி மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தாலும் மூன்றாம் வரிசையில் களமிறங்கி ஸ்ட்ரைக் ரேட்டை அதிரடியாக உயர்த்தி செல்கிறார்.
இந்த நிலையில் பண்ட் சில முக்கியமான கருத்துக்களை பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது
“நாங்கள் இங்கு விளையாட ஆரம்பிக்கும்போதே சுழற்பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும் என்று பேசி இருந்தோம். ரோஹித் பாய்க்கு கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளர் கிடைத்திருக்கிறார் என்று எனக்கு தோன்றுகிறது. நாங்கள் தொடரைப் பற்றி எதுவும் யோசிக்காமல் ஒவ்வொரு போட்டியில் வெல்வது குறித்து மட்டுமே யோசிக்கிறோம்.
அதனால் பெரிதாக எந்த விஷயங்களையும் போட்டு குழப்பிக் கொள்வதில்லை. போட்டி நடக்கும் நாட்களில் எவை சிறந்ததோ அவற்றை நாங்கள் வழங்க விரும்புகிறோம். ஒரு ஆதரவாளராக ரிக்கி பாண்டிங் எனக்கு எப்போதுமே இருக்கிறார். எனக்கு எந்த சூழ்நிலையிலும், என்ன சந்தேகம் ஏற்பட்டாலும் அது குறித்து அவரிடம் விவாதிக்கலாம். அவர் போன்ற ஒரு சிறந்த வீரரை பக்கத்தில் வைத்திருப்பது எப்போதுமே நல்லது.
இதையும் படிங்க:உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவர் ரிஷப் பண்ட்.. அவருக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.. கே எல் ராகுல் புகழாரம்
அவர் தன்னுடைய நுணுக்கங்களை எனக்கு வழங்குகிறார். ஆனால் இறுதியாக எனது தனிப்பட்ட முடிவை எடுக்க அவர் அனுமதி அளிக்கிறார். நீங்கள் தனிப்பட்டதாக முடிவு எடுக்கவில்லை என்றால் உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை வராது. நான் தவறு செய்யும் போது என்னை திருத்துவதற்கும் ரிக்கி பாண்டிங் என்னுடன் இருக்கிறார்” என்று பேசி இருக்கிறார். தற்போது மூன்றாம் வரிசையில் களமிறங்கி விளையாடி வரும் பண்ட் இந்திய அணியில் அதிக ரன்கள் குவித்தவர்களின் வரிசையில் அவரை தற்போது முதல் இடத்திலும் இருக்கிறார்.

