இந்திய அணி டி20 உலக கோப்பையில் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளை பெற்று நான்காவது போட்டியில் கனடா அணியை சந்திக்க உள்ளது.
இந்திய அணியில் குறிப்பாக பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் ரிஷப் பண்ட் மிக அபாரமாக செயல்பட்டு வருகிறார். இது குறித்து கே.எல் ராகுல் உலகத்தின் தலைசிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவர் ரிஷப் பண்ட் என்று பாராட்டியுள்ளார்.
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக கார் விபத்தில் படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட், தீவிர சிகிச்சை பெற்று கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி வந்தார். பின்னர் சிறிது சிறிதாக காயம் குணமாக மீண்டும் தனது உடற்பயிற்சியை தொடங்க ஆரம்பித்தார். அங்கிருந்து சரியாக ஒரு வருடத்தில் தனது விடாமுயற்சியின் மூலமாக என் சி ஏ வில் உடல் தகுதி பெற்று இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பங்கேற்றார்.
மிகக் குறைந்த காலத்திலேயே மிகச் சிறப்பாக உடல் தகுதி பெற்ற ரிஷப் பன்டை இந்திய முன்னாள் வீரர்கள் உட்பட அனைவருமே பாராட்டினர். இது அவரது மன வலிமையை தெளிவாக எடுத்துரைத்தது. ஐபிஎல் தொடரில் வீரராக செயல்பட்டது மட்டுமில்லாமல் ஒரு கேப்டனாகவும் செயல்பட்டு சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார். இவரது அபாரமான திறமையை கண்ட பிசிசிஐ டி20 உலக கோப்பையில் இவருக்கு மீண்டும் வாய்ப்பை அளித்தது.
டி20 உலக கோப்பையில் முதல் போட்டியில் அயர்லாந்து அணிக்காக 36 ரன்கள் குவித்த பண்ட், அடுத்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான மிக முக்கிய போட்டியில் 42 ரன்கள் குவித்தது மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பிங் சிறப்பாக செயல்பட்டு நான்கு முக்கிய கேட்ச்களை பிடித்தார். மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் பண்டிற்கு சக விக்கெட் கீப்பரான கே எல் ராகுல் பாராட்டி பேசி இருக்கிறார்.
இது குறித்து கே.எல் ராகுல் கூறும் பொழுது
“ரிஷப் பண்ட்க்கு என்ன ஆனது. அவருக்கு நடந்த விபத்தை யாரும் அவ்வளவு எளிதாக பார்த்து கடந்து விட முடியாது. அவருக்கு நேர்ந்ததை பார்த்து நாங்கள் அனைவருமே காயப்பட்டோம். இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப என்சிஏ வில் அவர் உழைத்த கடின உழைப்பை பார்த்த மக்களுக்கு அவரது கம்-பேக் ஆச்சரியமாக இருக்காது. நான் அவருக்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் பார்த்த சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவர் பண்ட் என்று புகழாரம் சூட்டி இருக்கிறார்.
இதையும் படிங்க:தமிழக வீரர் அஸ்வினின் 10 ஆண்டுகால ரெக்கார்டு உடைப்பு.. டி20 போட்டியில் தனது சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தினார் அர்ஸ்தீப் சிங்
தற்போது டி20 உலக கோப்பையில் மூன்றாம் வரிசையில் களம் இறங்கி விளையாடி வரும் பண்ட், இந்திய பேட்ஸ்மேன்களில் தற்போது அதிக ரன்கள் குவித்தவராக இருக்கிறார். இவரது பேட்டிங் ஃபார்ம் இப்படியே தொடரும் பட்சத்தில் டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்ததற்கான விருதையும் வாங்கலாம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

