இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஜஸ்பிரித் பும்ரா சாம் கான்ஸ்டாஸ்க்கு பந்துவீசிய அனுபவம் குறித்த சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணியில் நான்காவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய 19 வயது இளம் ஆட்டக்காரர் சாம் கான்ஸ்டாஸ் பும்ராவின் ஓவரில் அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தொடக்கப் போட்டியிலேயே அதிரடியாக சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்து அரை சதம் அடித்த நிலையில் ஜடேஜாவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
மேலும் பல நாட்களுக்குப் பிறகு பும்ராவின் பந்துவீச்சில் சிக்சர் அடித்து அவரது சாதனையையும் தகர்த்தார். இந்த நிலையில் நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெற்ற முடிந்த பிறகு பும்ரா கான்ஸ்டாஸ்க்கு பந்துவீசிய அனுபவம் குறித்து சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது தனது முதல் இரண்டு ஓவர்களில் அவரை ஏழு முறை ஆட்டம் இழக்கச் செய்து விடலாம் என்று தான் நினைத்ததாக சுவாரசியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் பொழுது “நான் இந்த சூழ்நிலையை அனுபவித்தேன். நான் நிறைய டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். கடந்த 12 வருடங்களாக டி20 கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன். சுவாரசியமான பேட்ஸ்மேன்கள் இருப்பது சரிதான். ஆனால் நான் விக்கெட்டுக்கு தூரத்தில் இருப்பதாக எப்போதும் நினைத்ததில்லை. ஆரம்பத்தில் எனது இரண்டு ஓவர்களில் கான்ஸ்டாஸை ஆறு அல்லது ஏழு முறை அவுட் ஆக்கிவிட முடியும் என்று நினைத்தேன். கிரிக்கெட்டை பொருத்தவரையில் எதார்த்தம் இதுதான். அது சில நேரங்களில் பலன் தரும் சில நேரங்களில் பலன் தராது.
இதையும் படிங்க:19 வயது வீரருடன் மோதல்.. மன்னிச்சிருங்க கோலி நான் அப்படி பேசிருக்கவே கூடாது.. உங்களால அத பொறுத்துக்க முடியல.. முன்னாள் ஆஸி வீரர் பேட்டி
எப்போதும் கிரிக்கெட்டில் நான் சவால்களை விரும்புகிறேன். இது ஒரு புதிய சவாலாக எனக்கு இருந்தது. இதில் எப்போதுமே சவால் அளிக்கக்கூடிய வீரராக இருப்பார். அவரது அணுகுமுறை என்னை போல வித்தியாசமாக இருக்கும். அவருக்கான நாள் அமையும் போது சிறப்பாக செயல்படுவார். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அவருக்கு எதிராக சீரான செயல்பாடு வெளிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு பந்தையும் நன்றாக வீச வேண்டும். நான் அவருக்கு எதிராக நீண்ட காலம் விளையாடி வருகிறேன். அவருக்கு எதிராக பந்து வீசுவது கடினம்” என்று கூறியிருக்கிறார்.

