19 வயது வீரருடன் மோதல்.. மன்னிச்சிருங்க கோலி நான் அப்படி பேசிருக்கவே கூடாது.. உங்களால அத பொறுத்துக்க முடியல.. முன்னாள் ஆஸி வீரர் பேட்டி

இந்திய அணியானது ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி, ஒரு டிரா என தொடரானது 1-1 என சமநிலையில் இருக்கிறது. இந்நிலையில் இரு அணிகளின் வெற்றி தோல்வியே உறுதிசெய்யப்போகும் 4வது டெஸ்ட் போட்டியானது மெல்போர்னில் நடந்துவருகிறது.

- Advertisement -

இந்தத் தொடரின் போது, 19 வயது நிரம்பிய அறிமுக ஆஸ்திரேலியா வீரரான சாம் கான்ஸ்டாஸ் தனது அபாரமான விளையாட்டை வெளிப்படுத்தி வந்தார். முகமது சிராஜ் வீசிய 10 ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன்களை எடுத்து விட்டு மறுமுறையில் நின்ற உஸ்மான் கவாஜாவை நோக்கி நடக்கத் தொடங்கினார், அப்பொழுது விராட் கோலி கான்ஸ்டாஸின் தோள்களில் வேகமாக மோதினார். ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்த ஆஸ்திரேலியா வீரர் சாம் கான்ஸ்டாஸ் பின்பு விராட் கோலி உடன் வாய் தகராறில் ஈடுபட்டார். இதனை கவனித்த கள்ள நடுவர்கள் மற்றும் கவாஜா ஆகிய இருவரும் சேர்ந்து கோலியே சமாதானப்படுத்தினர்.

- Advertisement -

கோலியின் அநாகரிகமான இந்த செயலை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கெர்ரி ஓ கீஃப் “அவன் கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் ஆணவத்தால் கட்டி எழுப்பி உள்ளார்” என்று சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்தார். இப்பொழுது கெர்ரி ஓ கீஃப் அவரின் கருத்துக்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

- Advertisement -

நான் அப்படி சொல்லி இருக்க கூடாது:

கெர்ரி ஓ கீஃப் கூறியதாவது, “நான் விராட் கோலியின் நடத்தையைப் பார்த்து ஆணவம் என்று அழைத்ததற்காக நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நான் அப்படி சொல்லி இருக்கக் கூடாது. அவர் வீராப்புடைய வீரர், எனவே அவர் கிரிக்கெட்டை அப்படி விளையாடுகிறார்.

இவரைப் போல இன்னொரு வீரரும் வீராப்படைவதே பார்த்ததும், அவர் சற்று கோபமடைந்து அவரது பாணியில் பதிலளித்தார் என்று நினைக்கிறேன். கோலி ஒரு உணர்ச்சிவாய்ந்த கிரிக்கெட் வீரர், அவரது ஆவேசமே அவரை ஒரு போட்டி வாய்ந்த வீரராக உருவாக்குகிறது.” என்று மன்னிப்பு கேட்டுள்ளார்.

- Advertisement -

இதையும் கொஞ்சம் படிங்க: நான் சொல்றத அவர்ட்ட சொல்லுங்க.. டீமை விட்டு தூக்க போறோம்னு.. இப்படி ஒருத்தர் இந்திய அணிக்கு தேவை இல்லை – சுனில் கவாஸ்கர் விமர்சனம்

ஐசிசி விதியே மீறியதால் கோலிக்கு போட்டிக்கட்டணத்திலிருந்து 20% அபராதமும், மற்றொரு வீரருடன் உடல் ரீதியாக தகராறில் ஈடுபட்டதால் ஒரு டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், விராட் கோலி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் மேற்படி நடவடிக்கை இல்லாமல் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles